Saturday, 6 August 2011

அமெரிக்கா : கடன் உச்சவரம்பு பிரச்சனை நாடாளுமன்றம் மீது அமெரிக்க மக்கள் அதிருப்தி

அமெரிக்க கடன் உச்ச வரம்பு விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கும், குடியரசுக் கட்சியனருக்கும் இடையே கடும் மோதல் நீடித்தது.

உச்சவரம்பு கெடு தேதியான ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு ஒரு நாள் முன்பாக அமெரிக்க நாடாளுமன்றம் கடன் உச்ச வரம்பை அதிகரிக்க ஒப்புக் கொண்டது. நாடாளுமன்றத்தின் காலதாமதமான இந்த நடவடிக்கை 82 சதவீத அமெரிக்க மக்களுக்கு அதிருப்பதியை தந்துள்ளது.


கடன் உச்ச வரம்பு குறித்து அமெரிக்க நாடாளுமன்றம் மேற்கொண்ட செயல்பாடு குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 14 சதவீத மக்கள் மட்டுமே நாடாளுமன்ற செயல்பாட்டை ஏற்றுக்கொண்டன.

அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு 14.3 லட்சம் கோடி டாலர். இதனால் கடன் உச்சவரம்பை அதிகரிக்க வேண்டிய நிலையில், குடியரசுக் கட்சியினர் வாக்கு வாதம் செய்தனர். கடைசி நேரத்திலேயே 2.3 லட்சம் கோடி டாலர் வரம்பை மேலும் அதிகரிக்க ஒப்புதல் தரப்பட்டது.

கடந்த 34 ஆண்டுகளில், முதன்முறையாக நாடாளுமன்றம் மீது, மிக அதிகபட்ச அதிருப்தி தற்போது மக்களிடையே ஏற்பட்டது. இதற்கு முன்னர் 2010 ம் ஆண்டில் 77 சதவீத மக்கள் அமெரிக்க நாடாளுமன்ற செயல்பாடு குறித்து விமர்சித்தனர்.

No comments:

Post a Comment