எண்ணைய் வளம் மிக்க நாடான சவுதி அரேபியாவில் மிக உயரமான கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இதில் ஹோட்டல்கள், அடுக்குமாடி ஆடம்பர வீடுகள், அலுவலகங்கள் என அனைத்து வசதிகளும் இடம் பெறும். இந்த கட்டிடம் கட்டுவது குறித்து கடந்த 2008 ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் 2009 ம் ஆண்டு தொடக்கத்தில் உலக அளவில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து அதில் மந்த நிலை ஏற்பட்டது.
கடந்த ஆண்டு துபாயில் புர்ஜ்காலிபர் என்ற கட்டிடம் திறக்கப்பட்டது. 160 மாடிகளை கொண்ட 822 மீற்றர் உயர கட்டிடமான இது உலகிலேயே மிக உயரமானது என்ற பெருமை பெற்றது.
தற்போது இதை பின்னுக்கு தள்ளிவிட்டு சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் 1000 மீட்டர் உயரத்தில் கட்டப்பட உள்ள இந்த கிங்டம் டவர் உலகின் மிகப்பெரிய கட்டிடம் என்ற அந்தஸ்தை பெற உள்ளது.
இந்த தகவலை சவுதி அரேபியாவின் கோடீஸ்வரரும், இளவரசருமான அல்வாலீட்பின் தலால் தெரிவித்துள்ளார்.
செங்கடல்
நகரம் என்றழைக்கப்படும் ஜித்தா நகரில் 1000 மீட்டர் உயரத்தில் இக்கட்டிடம்
உருவாக உள்ளது. இக்கட்டிடம் சுமார் 2 சதுர மைல் பரப்பளவில்
கட்டப்படுகிறது. இதற்கு ”கிங்டம் டவர்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதில் ஹோட்டல்கள், அடுக்குமாடி ஆடம்பர வீடுகள், அலுவலகங்கள் என அனைத்து வசதிகளும் இடம் பெறும். இந்த கட்டிடம் கட்டுவது குறித்து கடந்த 2008 ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் 2009 ம் ஆண்டு தொடக்கத்தில் உலக அளவில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து அதில் மந்த நிலை ஏற்பட்டது.
கடந்த ஆண்டு துபாயில் புர்ஜ்காலிபர் என்ற கட்டிடம் திறக்கப்பட்டது. 160 மாடிகளை கொண்ட 822 மீற்றர் உயர கட்டிடமான இது உலகிலேயே மிக உயரமானது என்ற பெருமை பெற்றது.
தற்போது இதை பின்னுக்கு தள்ளிவிட்டு சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் 1000 மீட்டர் உயரத்தில் கட்டப்பட உள்ள இந்த கிங்டம் டவர் உலகின் மிகப்பெரிய கட்டிடம் என்ற அந்தஸ்தை பெற உள்ளது.
இந்த தகவலை சவுதி அரேபியாவின் கோடீஸ்வரரும், இளவரசருமான அல்வாலீட்பின் தலால் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment