பட்டினிச்சாவை எதிர்நோக்கிவரும் சோமாலியாவுக்கு, இந்தியா உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு
உத்தியோகபூர்வமாக இன்னும் சில நாட்களில் வெளிவரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வறட்சி, உள்நாட்டு போர், வேலையில்லா பிரச்சினை, சுகாதார வசதிகள் இன்மை போன்ற காரணங்களால், ஆபிரிக்க நாடுகளான சோமாலியா, எத்தியோபியா, கென்யா போன்ற நாடுகளில் பெருமளவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
ஐ.நாவும் இந்நாடுகளை பட்டினி நாடுகளாக அறிவித்திருந்தது.
இந்நாடுகளில் சுமார் 7.5 மில்லியன் மக்களில், 3.5 மில்லியன் சோமாலியர்கள் ஒரு வேளை உணவுக்காக ஏங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியா சோமாலியாவுக்கு உதவுவதற்கு தானாக முன்வந்துள்ளது. கடந்த வருடம் வட கொரியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கும் இந்தியா உணவு உதவி செய்திருந்தது.
கடந்த 90 நாட்களில், சோமாலியாவின் தெற்கு பகுதிகளில் மாத்திரம் பட்டினிக்கொடுமையால் 5 வயதுக்குட்பட்ட 29,000 பேர் மரணத்தை தழுவியுள்ளனர். மேலும் 640,000 சோமாலிய சிறுவர்கள் கடும் வறுமையில் வாடி வதங்கியுள்ளனர்.

No comments:
Post a Comment