Saturday, 6 August 2011

பிளஸ் 2 சிறப்பு தேர்வுக்கு தனித்தேர்வர்கள் 12‌ஆ‌ம் தே‌தி வரை விண்ணப்பிக்கலாம்


பிளஸ்2 சிறப்பு தேர்வுக்கு தனித்தேர்வர்கள் வரு‌ம் 12ஆ‌ம் தே‌தி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். 
பிளஸ் 2 சிறப்பு தேர்வு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கனவே தேர்வு எழுதியவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தேர்வு எழுத `எச்' வகை விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும்.


10
ம் வகுப்பு தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டு இடைவெளியும், 1.9.2011 அன்று 16 1/2 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நேரடி தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். இதற்கு `எச்பி' வகை விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும்.
 
தொழிற்கல்வி பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதால் மார்ச் 2011 மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில், தொழிற்கல்வி பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள், தோல்வி அடைந்த பாடங்களை பழைய பாடத்திட்டத்தின்படி தேர்வு எழுத செப்டம்பர் 2011 மற்றும் 2012 ஆகிய இரு பருவங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
 
முதல் முதலாக பிளஸ்2 தேர்வு எழுதும் `எச்பி' வகை நேரடித்தனித்தேர்வர்கள் பகுதி-1, பகுதி-2 மொழிப்பாடங்களுடன் 2005-2006ஆம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி அமைந்துள்ள 5 பாடத்தொகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் மட்டும் தேர்வு எழுத முடியும். 

தேர்வுக்கு விண்ணப்ப படிவங்களை 8-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் பெற்றுக்கொள்ளலாம்.
 
விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள் மற்றும் தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் கிடைக்கும்.
 
 பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திற்கு 12ஆ‌ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கடைசி தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 

விண்ணப்பங்களை தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பக்கூடாது. சிறப்பு தேர்வு செப்டம்பர் 21ஆ‌ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆ‌ம் தேதி முடிவடையும். 
தேர்வு அட்டவணை:
செப்டம்பர் 21ஆ‌ம் தேதி - மொழித்தாள்- 1,
22
ஆ‌ம் தேதி - மொழித்தாள்- 2
23
ஆ‌ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்
24
ஆ‌ம் தேதி - ஆங்கிலம் 2ஆம் தாள்
26
ஆ‌மதேதி - இயற்பியல், வணிகவியல், உளவியல், சுருக்கெழுத்து (தமிழ், ஆங்கிலம்)
27
ஆ‌ம் தேதி - வேதியியல், பொருளாதாரம், தொழிற்கல்வி பாடங்கள்
28
ஆ‌ம் தேதி - உயிரி வேதியியல், கம்பïட்டர் சயின்ஸ், அரசியல் அறிவியல், தகவல்தொடர்பு ஆங்கிலம், மனையியல், புள்ளியியல், தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்)
29
ஆ‌ம் தேதி - உயிரியல், வரலாறு, தாவரவியல், நுண்ணுயிரியல், சிறப்பு மொழித்தாள்
30
ஆ‌மதேதி - கணிதம், கணக்கு பதிவியல், விலங்கியல், அடிப்படை அறிவியல், புவியியல்அக்டோபர் 1ஆ‌மதேதி - வணிக கணிதம், இந்திய கலாசாரம், நர்சிங் (பொது), நியூட்ரிஷன் மற்றும் டயட்டிக்ஸ்)

No comments:

Post a Comment