Monday, 22 August 2011

அன்னா ஹஸாரே போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்க வேண்டாம்- டெல்லி தலைமை இமாம் சையது புகாரி அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் அன்னா ஹஸாரே நடத்தி வரும் போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையத் அகமது புகாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் ஆகிய கோஷங்கள் நிரந்தரமாகி விட்டன. இவை இஸ்லாமுக்கு எதிரானவையாகும்.

உத்தர பிரதேசத்தில் டிராக்டர் விபத்து - 41 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் டிராக்டர் துரோலி ஒன்று சாலையோர பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 41 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 20 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். லக்னோவிலிருந்து 300 கி.மீ தொலைவில் நாக்லா பகுதியின் பாலியா எனுமிடத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க நிதிச் சரிவால் கனடா வங்கிகளின் வளர்ச்சி பாதிக்கும் அபாயம்

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிதி நெருக்கடியால் அருகாமையில் உள்ள கனடாவின் வங்கிகளின் வளர்ச்சி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே கால் இறுதி ஆண்டில் கனடா வங்கிகளுக்கு பலவீனமான வளர்ச்சி காணப்பட்டது. ஆனால் நடப்பு கால் இறுதி ஆண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறலாம் என அவை திட்டமிட்டுள்ளன.

திரிபோலியை நோக்கி முன்னேறி வரும் லிப்ய எதிர்பாளர்கள்

லிபியத் தலைநகர் திரிபோலியின் புறநகர்ப் பகுதிகளில் நேற்று எதிர்ப்பாளர்கள் புகுந்து கடாபி ராணுவம் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.

இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் கடாபி ராணுவம் தோல்வி அடையக் கூடும். அதே நேரம் லிபிய அரசுத் தரப்பில் உடனடிப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Saturday, 20 August 2011

ஆஸ்திரேலியாவிலும் தொடரும் முஸ்லிம் விரோத போக்கு ஃபர்தாவை அகற்ற மறுத்தால் சிறை தண்டனை: ஆஸ்திரேலியா அரசு புதிய சட்டம்

ல்போர்ன் : போலீசார் சோதனையிட வந்தால், பர்தாவை அகற்றி முகத்தைக் காட்ட வேண்டும். அதைச் செய்ய மறுத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் அடுத்த வாரம் புதிய சட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

ஊடகங்கள் பாப்புலர் பிரண்டை தாக்குவதற்கு எவ்வாறு குறிவைக்கிறது ?


இந்தியாவில் தற்போது சில மீடியாக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு பிடித்த இலக்காக மாறியுள்ளது. சமீப காலமாக தொலைக்காட்சி சேனல்களிலும், நாளிதழ்களிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பற்றிய தவறான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. பாப்புலர் ஃப்ரண்ட் மீதான் மீடியாக்களின் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும்தான் என்று இல்லாமல் எல்லா மாநிலங்களிலும் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் இருக்கின்ற பெரும்பாலான மொழிகள் வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ்களில் பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் இயக்க உறுப்பினர்கள் அறவே இல்லாத மாநிலங்களிலும் இத்தகைய மீடியாக்களின் தாக்குதல்கள் இருந்து வருகிறது.

சிரியா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா


சிரிய அதிபர் பஷீர் அல் ஆசாத் பதவி விலக வேண்டுமென கோரி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பொதுமக்கள்
மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அமெரிக்கா சிரியா மீது பொருளாதார தடை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்யசபாவினால் பதவி நீக்கம் செய்யப்படும் முதல் நீதிபதி

ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டம் முழுவீச்சில் வலுப்பெற தொடங்கியுள்ள நிலையில்,
ஊழல் புகார்களில் சிக்கிய கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபத் சௌமித்ரா சென் ராஜ்யசபாவினால் பதவி நீக்கம்செய்யப்பட்டுள்ளார்.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாறுகிறது கலைஞரின் சட்டமன்ற கட்டிடம்!

திமுக ஆட்சியின் போது, கட்டப்பட்ட தமிழக சட்டமன்றத்திற்கான புதிய தலைமை செயலக கட்டிடத்தில்,
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்படவுள்ளடாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கம் பெயர் மாறுகிறது!



 மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ள மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் விரைவில்
'பஷிம் பங்கா' என மாற்றம்  செய்யப்படவிருக்கிறது.

பங்களா, பங்களா பூமி, பஷிம் பங்கா உள்ளிட்ட பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் 'பசிம் பங்கா' (Pashchimbanga) எனும் பெயரை மாநில அரசும், எதிர்க்கட்சிகளும் ஏகமனதாக தெரிவு செய்தன.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்புக்கு தடை: மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தின் படங்கள்

நெல்லையில் நடக்க இருந்த சுதந்திர அணிவகுப்பை தடை செய்ததை கண்டித்து மதுரையில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சரியாக காலை 11 மணிக்கு மீனாட்சி பஜாரில் வைத்து நடைபெற்றது. பாப்புலர் ப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் யூசுப் சிறப்புரை ஆற்றினார் . திரளாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்


காஸா மீது இஸ்ரேல் விமான தாக்குதல் : 6 பேர் பலி

இஸ்ரேல் காஸா மீது விமான தாக்குதல் மேற்கொண்டுள்ளது, இஸ்ரேலின் விமான தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீனிய தகவல்கள் கூறுகின்றன.  இதற்கு முன் இஸ்ரேலின் தெற்கு பகுதியான எய்லட் பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினரை ஏற்றிவந்த பஸ்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.