Saturday 20 August 2011

ராஜ்யசபாவினால் பதவி நீக்கம் செய்யப்படும் முதல் நீதிபதி

ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டம் முழுவீச்சில் வலுப்பெற தொடங்கியுள்ள நிலையில்,
ஊழல் புகார்களில் சிக்கிய கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபத் சௌமித்ரா சென் ராஜ்யசபாவினால் பதவி நீக்கம்செய்யப்பட்டுள்ளார்.

சௌமித்ரா சென் மீது நிதி முறைகேடு, ஊழல் புகார் குற்றச்சாட்டு எழுந்ததால், இது பற்றி விசாரணை நடத்துவதற்கு ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி குழுவொன்றை நியமித்தார். உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட இக்குழு  சௌமித்ரா சென் மீதான குற்றச்சாட்டுக்களை உறுதி செய்தது.

இதையடுத்து, சிபிஎம் தலைவர் சீதாராம் எச்சூரில், நேற்று முன் தினம் சபையில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். நீதிபதி சௌமித்ரா சென்னும் நேரில் வரவழைக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டார்.

நேற்றும் இத்தீர்மானம் மீதான விவாதம் தொடர்ந்தது. இறுதியில் மாலை நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்து கொண்ட 189 பேரில், 172 பேர் சௌமித்ரா சென்னை பதவி விலக்க வேண்டுமென்ற என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதையடித்து, குடியரசு தலைவருக்கு இத்தீர்மானம் பற்றி முறைப்படி அறிவிக்கப்படவிருக்கிறது. இதையடுத்து குடியரசு தலைவர் சௌமித்ரா சென்னை பதவி நீக்கம் செய்ய விரைவில் உத்தரவிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம், ராஜ்யசபா மூலம் பதவி நீக்கம் செய்யப்படும் முதல் நீதிபதி என்ற பெயரை சௌமித்ரா சென் பெற்றுள்ளார்.

முன்னதாக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான உத்தரபிரதேச கால் நடை, பால் வளத்துறை அமைச்சர் அவாத் பால் சிங் யாதவும், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது குறிப்பிடத்தக்கது. லோக்பால் நீதிமன்ற நீதிபதி மக்ரோட்ரா இதற்கான பரிந்துரையை மேற்கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment