Saturday 20 August 2011

காஸா மீது இஸ்ரேல் விமான தாக்குதல் : 6 பேர் பலி

இஸ்ரேல் காஸா மீது விமான தாக்குதல் மேற்கொண்டுள்ளது, இஸ்ரேலின் விமான தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீனிய தகவல்கள் கூறுகின்றன.  இதற்கு முன் இஸ்ரேலின் தெற்கு பகுதியான எய்லட் பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினரை ஏற்றிவந்த பஸ்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.


இந்த தாக்குதலை தாம் நடத்தவில்லை என்று காஸாவை ஆளும் ஹமாஸ் நிர்வாகம் தெரிவித்துள்ள போதும் இஸ்ரேல் விமாங்கள் காஸா மீது தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலுக்கான தொடர்பை மறுத்துள்ள ஹமாஸ், இஸ்ரேல் தாக்கினால் திருப்பி தாக்குவோம், ஹமாஸ் கைகளை கட்டி பார்த்து கொண்டிருக்காது என்று தெரிவித்திருந்தது.

இஸ்ரேலின் தெற்கு பகுதியான எய்லட் தாக்குதலில் இரண்டு இராணுவதினர் , மற்றும் ஐந்து இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு சில மணி நேரத்தில், இஸ்ரேல் காஸா மீது விமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு Popular Resistance Committees -PRC என்ற காஸாவில் இயங்கும் ஹமாஸுடன் இணையாத போராளிகள் அமைப்பு ஒன்று பொறுப்பு என்று இஸ்ரேல குற்றம் சாட்டியுள்ள போதும் அந்த PRC அமைப்பு அதை மறுத்துள்ளது.

இந்த இஸ்ரேல் தாக்குதில் PRC அமைப்பின் தலைவர் ஒருவர் உட்பட நான்கு உறுப்பினர்கள் கொல்லபட்டுள்ளனர் என்று இஸ்ரேல தெரிவித்துள்ளது. இதேவேளை சில மணிநேர  இடைவெளியில் காஸா மீது இஸ்ரேல் இரண்டாவது தடவை தாக்குதல் நடத்தியுள்ளது.

 இதேவேளை இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் ஏழு பலஸ்தீனர்களை  தாம் கொன்றுள்ளதாக இஸ்ரேல்  தகவல்கள்  தெரிவிக்கின்றது .இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதால் ஹமாஸ் இஸ்ரேல் மீது திருப்பி தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



No comments:

Post a Comment