புதுடெல்லி: ஊழலுக்கும், கறுப்பு பணத்திற்கும் எதிரான பொது மக்களின் கோபத்தையும், உணர்வுகளையும் சாதகமாக பயன்படுத்த ஆன்மீகத்தின் பெயரால் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ள ஆர்.எஸ்.எஸின் யோகா குரு பாபா ராம் தேவ் ஹசாரே மாடல் போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்.
ஊழலுக்கு எதிராகவும், இந்தியர்களின் கறுப்பப்பணத்தை திரும்ப கொண்டுவரவும் வருகிற ஜூன் 4-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக பாபா ராம் தேவ் அறிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க்பரிவார பயங்கரவாத அமைப்புகளின் தீவிர ஆதரவுடன் இந்த போராட்டம் நடைபெறவிருக்கிறது.
பொது சமூகத்தின் ஆதரவை பெறுவதற்காக ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பு நடத்தும் போராட்ட நாடகத்தை மத்திய அரசு கவனமாக ஆராய்ந்து வருகிறது. இதற்கிடையே ஊழலுக்கு எதிராக செயல்ரீதியான தீர்வு ஏற்படும் எனவும், ஆதலால் போராட்டம் வேண்டாம் என பாபா ராம்தேவிற்கு பிரதமர் மன்மோகன்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை கொண்டுவருவதற்கு அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரத போராட்டத்திற்கும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அளித்திருந்தது. ஆனால், போராட்டத்தை முற்றிலும் தங்களுக்கு சாதகமாக்க ஹிந்துத்துவா சக்திகளால் முடியவில்லை. லோக்பால் மசோதா வரைவு குழுவை மத்திய அரசு உருவாக்கியதன் மூலம் ஹசாரே தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
லோக்பால் மசோதா வரைவு குழுவில் ஹசாரே உள்பட 5மக்கள் பிரதிநிதிகள் இடம்பெற்ற போதிலும் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு பிரநிதித்துவம் அளிக்கப்படவில்லை. பாபா ராம்தேவ் உள்ளிட்டவர்களுக்கு பிரநிதித்துவம் வழங்கப்படும் என நம்பியிருந்த ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு இது ஏமாற்றத்தை தந்தது.
லோக்பால் மசோதா வரைவுக்குழுவில் ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாட்டையும், ஊழல் மற்றும் கறுப்புபணத்திற்கான மக்களின் உணர்வையும் தங்களுக்கு சாதகமாக்க ஹிந்த்துவா சக்திகள் முயலுகின்றன. மிகப்பெரிய அளவிலான பிரச்சாரங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமையில் நடந்துவருகிறது.
பிரதமர் மன்மோகன்சிங்கின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை அரசியல் விவகார குழு ராம்தேவின் போராட்டம் ஏற்படுத்தும் பிரச்சனைகளை குறித்து விவாதித்தது. போராட்டத்தை துவக்கவிருக்கும் ராம்தேவுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் கமல்நாத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ராம் தேவின் போராட்டத்திற்கு திட்டம் தீட்டியது நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமையிடமாகும். நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் சர்சங்க்சாலக் மோகன் பாகவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியபிறகே பாபா ராம்தேவ் போராட்டத்தை அறிவித்துள்ளார். ராம்தேவிற்கு இந்தியாவில் 80 ஆயிரம் யோகா பயிற்சி மையங்கள் உள்ளன.ஒவ்வொரு மையத்தில் இருந்தும் தினந்தோறும் 10 பேர் வீதம் போராட்ட மேடைக்கு வரவழைப்பது என திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment