Wednesday 1 June 2011

முத்துப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு நியமனம்...


சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள

பொதுமக்கள் எந்த நேரத்திலும் அழைக்கலாம்

புதியதாக பொறுப்பு ஏற்ற முத்துப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பேட்டி

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கந்தசாமி சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு வேறு ஊருக்கு சென்றுவிட்டதால் புதியதாக முத்துப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டாக கோ.கோபி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


நியமனம் செய்யப்பட்டுள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு கோபி சேலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய இவர் தற்போது முத்துப்பேட்டைக்கு பொறுப்பு ஏற்று உள்ளார். ஊர் முக்கிய பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் நிருபருக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முத்துப்பேட்டைக்கு உட்பட்ட பகுதியில் சமீபத்தில் உள்ளது போல் சட்ட ஒழுங்கு மேலும் காக்கப்படும். பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே கண்டுபிடித்து தடுத்துவிட்டால் பெரிய பிரச்சினைகள் கண்டிப்பாக வராது. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம். நகரில் போக்குவரத்துக்கு இடைïறு கொடுக்காமல் வாகனங்களை சாலையில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பழைய பஸ்நிலையம், பங்களாவாசல், ஆசாத்நகர், புதிய பஸ்நிலையம் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். நகரில் தேவை இல்லாமல் கூட்டமாக நிற்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்படி மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பூர்வமான எந்தவிதமான பிரச்சினைகள் என்றாலும் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம். எனது நம்பர் 98659 82974 எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் கொடுத்தால் அவர்களின் பெயர் ரகசியம் காக்கப்படும்.
புகார்களுக்கு கண்டிப்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கு பொதுமக்கள், வியாபாரிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Source : muthupet.org

No comments:

Post a Comment