Wednesday 1 June 2011

முஸ்லிம் உம்மாஹ்வின் எதிரியாக தொடர்ந்தும் மேற்கு அரச இயந்திரங்கள்...


கடந்த ஞாயிற்று கிழமை இஸ்ரேலிய அமைச்சரவையில் உரையாற்றியுள்ள அதன் பிரதமர் நெதன்யாகு ஜெருசலம் இஸ்ரேலின்தலைநகராகவும் அதன் பிரிக்கமுடியாத அங்கமாக இருக்கும் என்று தெரிவித்து இஸ்ரேலின் சியோனிச கொள்கையை உறுதிப் படுத்தியுள்ளார்  1948 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டு ஜெருசலத்தை கைப்பற்றியது அங்கிருந்த ஏழு இலட்சம் முஸ்லிம்களை  வெளியேற்றியது ஜெருசலத்தின் மேற்கு பகுதி முழுவதும் யூத குடியேற்றங்களால் நிறைக்கப்பட்டது.
அல் குத்ஸ் மஸ்ஜித் அமைந்துள்ள கிழக்கு ஜெருசலம் படிப்படியாக யூத குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது
அங்கிருந்து பலஸ்தீனர்கள் படிப்படியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர் அல்குத்ஸ் மஸ்ஜிதை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள இஸ்ரேல  தற்போது  நகர அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் பலஸ்தீனர்களை பலவந்தமாக வெளியேற்றி வருகின்றது விரிவாக
இஸ்ரேல ஐந்து ஆண்டு அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் கிழக்கு ஜெருசலத்தையும் யூத மயமாக்கும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது அந்த திட்டத்திற்கு “a comprehensive economic plan”  என்று பெயரிட்டுள்ளது இதற்கு 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் முழுமையான ஆக்கிரமிப்பு மற்றும் நிலம்பரிப்பு திட்டம் என்று பலஸ்தீனர்கள் வர்ணித்துள்ளனர் இது தொடர்பாக பலஸ்தீன அமைப்புகள் தெரிவித்துள்ள தகவலில் ஐந்து ஆண்டுகளில் கிழக்கு ஜெருசலத்தின் மக்கள் தொகையில் மாற்றத்தை கொண்டுவரும் நோக்கத்தை தெளிவாக பிரதிபளிப்பதாகவும் கிழக்கு ஜெருசல பலஸ்தீனர்களின் மக்கள் தொகையை மேலும் மாற்றத்துக்கு உட்படுத்தும் நோக்கம் கொண்டுள்ளது என்றும் அவை தெரிவித்துள்ளன.
1948 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி பிரிட்டன் பலஸ்தீனை விட்டு விலகியது அதே தினத்தில் இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடு பிரகடனம் செய்யப்பட்டது அதனை முன்பு திட்டமிட்டவாறு பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் அதற்கு தமது அங்கீகாரத்தை வழங்கியது. அதன் முதல் பிரதமராக டேவிட் பென் கரியன்- David Ben-Gurion- என்ற சியோனிச இயக்கத்தின் தலைவர் இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாட்டின் முதல் பிரதமாராக சியோனிச இயக்கத்தினால் தெரிவுசெய்யப்பட்டார் அரபு முஸ்லிம்கள் மிகவும் கடுமையானதும் தொடரானதுமான எதிர்ப்பை காட்டி வந்தனர்.
இந்த தொடரான எதிர்ப்பை ஒடுக்குவது தொடர்பாக 1953 ஆம் ஆண்டு சியோனிச உயர் பீட தலைவர்கள் கலந்துரையாடல்களை நடாத்தினர் அந்த கலந்துரையாடல் ஒன்றில் கருத்துரைத்த டேவிட் பென் கரியன் -David Ben-Gurion- அப்போது இவர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சராக இயங்கிகொண்டிருந்தார்- அந்த கலந்துரையாடலில் பேசிய அவர் ‘‘வெளிநாடுகளில் நடக்கும் அரசியல் விவாதங்களில் அராபியர்கள் நமக்குத் தெரிவிக்கும் எதிர்ப்பைக் குறைத்துக் காட்டுவோம்.
ஆனால் நமக்கு உண்மைகள் தெரியும்  அரசியல்ரீதியாக நாம் ஆக்கிரமிப்பாளர்கள், அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளப் போராடுகிறார்கள். இந்த நாடு அவர்களுடையது, ஏனெனில் அவர்கள் இங்கே வசிக்கிறார்கள். அவர்களுடைய பார்வையில் நாம் இந்த நாட்டை அபகரிக்க வந்துள்ளவர்கள், நாம் இன்னும் இங்கு வெளியாட்கள்தாம் அரபியர்கள் ஏன் சமாதானத்தை ஏற்க வேண்டும்? நான் ஒரு அரபியாக இருந்தால் இஸ்ரேலுடன் சமாதானம் செய்யமாட்டேன் இது இயற்கையானது என்று தெரிவித்தார்.
மேலும் அவர், இது அவர்களின் நாடு அதை நாங்கள் கைப்பற்றியுள்ளோம் பலஸ்தீனர்களின் கண் முன்னேயே அவர்களது முன்னோர்கள் வாழ்ந்துவந்த பூமியை கிராமங்களையும் நாம் களவாடுகின்றோம் இன்னும் ஓர் இரு பரம்பரை காலத்தில் அவர்கள் இதை மறந்து விடலாம் ஆனால் இப்போது அதற்கு சந்தர்ப்பமே இல்லை ஆகவே இதற்கான தீர்வு நாம் இராணுவ ரீதியில் மிகவும் பலம் படைத்தவர்களாக இருக்கவேண்டும் என்பதுதான் என்றால்.
மேலும் அவர், ஒரு நாள் அவர்கள் அனைவரும் வெளியேறி நாம் இந்த நாட்டைப் பெற்று விடலாம். நாம் ஒருவர் என்றால் அவர்கள் பத்துப் பேர் இருக்கிறார்கள். ஆனால் யூதர்களாகிய நமக்கு அவர்களைவிடப் பத்து மடங்கு அறிவு அதிகம் அல்லவா?’’ என்று தெரிவித்தார் இது இஸ்ரேலின் கொள்கை உரை என்றுதான் ஆய்வாளர்கள் பார்க்கின்றனர் அந்த கொள்கையில்தான் இஸ்ரேலிய சட்டவிரோத அரசு இன்றும் செயல்பட்டு வருகின்றது இதற்கு ஒரு எடுத்து காட்டுதான் ஜெருசலம் என்பது பிரிக்கமுடியாத இஸ்ரேலின் தலைநகரம் என்ற இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் வாதம். இந்த அப்பட்டமான சிந்தனை பயங்கரவாதத்திற்கும்  நடத்தை ரீதியான அதன் பயங்கரவாதத்திற்கும்தான் அமெரிக்காவும் ஏனைய மேற்கு சக்திகளும் தமது விசுவாசத்தையும் ஆதரவையும் கொட்டிவருகின்றது .
மேற்கு உலகம்   சியோனிச பயங்கரவாத கொள்கை கொண்ட தாம்  பெற்ற சட்டவிரோத தேசத்தை விசுவாசத்துடன் பாதுகாத்து வருகின்றது அதன் முன்னும் பின்னும் இரும்பு அரணாக அவை காவல்  காத்து நிற்கின்றது இராணுவ, அரசியல் , பொருளாதார ரீதியிலும் இராஜதந்திர ரீதியிலும் பாதுகாத்து வருகின்றது எதிர் வரும் செப்டம்பர் மாதம் ஐநா பாதுகாப்பு சபையில் பலஸ்தீன தேசத்தை உருவாக்க தேவையான அங்கீகாரத்தை பலஸ்தீன தரப்புகள் கோரவுள்ளது அதை ஒபாமா நிர்வாகம் நிராகரிக்கும் என்பதை ஒபாமா ஏற்கனவே அமெரிக்காவில் இயக்கும் இஸ்ரேலிய முக்கிய அரசியல் அழுத்த அமைப்பான அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைபப்பு- American Israel Public Affairs Committee -AIPAC-யின் வருடாந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்தார்.
இதன் மூலம் சியோனிச பயங்கரவாத்தின் பாதுகாவலனாகவும் முஸ்லிம் உம்மாஹ்வின் எதிரியாகவும்  மேற்குலகம் தொடர்ந்தும் வரலாற்றில் இடம்பிடித்து வருவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment