பாலஸ்தீனத்தை தனி நாடாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்படுகிறது.இந்த மாதம் 20ம் தேதி துவங்கும் ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பாலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அந்தஸ்து தரக்கூடாது என காசா பகுதியை ஆக்கிரமித்து பாலஸ்தீனத்துடன் போர் செய்யும் இஸ்ரேல் கூறி வருகிறது.
இஸ்ரேலின் கூட்டாளியாக உள்ள அமெரிக்காவும் பாலஸ்தீனத்தை தனிநாடாக தற்போது அறிவிப்பதை விரும்பவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவோம், பின்னர் உரிய முடிவு எடுப்போம் என அமெரிக்கா கூறுகிறது.
பாலஸ்தீனத்தை தனிநாடாக அறிவிக்க கூடாது என்ற அமெரிக்காவின் முடிவுக்கு பெரும் ஆதரவு இல்லை. இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்பில் பாலஸ்தீனம் தனிநாடு கோரிக்கை வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா வாக்கெடுப்பு நடைபெறும் நேரத்தில் ஒபாமா இம்மாதம் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை நியூயார்க்கில் இருப்பார் என வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment