கிரிமினல் குற்றச்சாட்டுக்களை பின்னணியில் கொண்டவர்கள் இனி தேர்தலில் போட்டியிட முடியாது எனும் புதிய சட்டத்தை
மத்திய அமைச்சரவை விரைவில் கொண்டுவரவிருக்கிறது.
இம்மசோதாவின் படி, காவற்துறையினரின் வழக்குகளிலோ, சிபிஐ வழக்குகளிலோ, குற்றப்பத்திரிகைகளிலோ ஒருவர் பெயர் இடம்பெற்றிருந்தால் அவர் தேர்தலில் போட்டியிடுவது முழுமையாக தடுக்கப்படும். இம்மசோதா மூன்று வாரங்களில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.
இம்மசோதா லோக்பாலை விட வலிமையான மசோதாவாக இருக்கும் என, மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் ஷால்வே தெரிவித்துள்ளார். எனினும், இந்த சட்டத்தை இந்திய அரசியல்வாதிகள் தவறாக பயன்படுத்த கூடும். எதிர்க்கட்சியினரை போட்டியிடாமல் செய்வதற்காக அவர்கள் மீது பொய் வழக்குகளை போடலாம் என எச்சரித்துள்ளார்.
அண்மையில் மத்திய அமைச்சரவையில் உள்ளவர்களை பற்றி வெளியான புள்ளி விபரம் ஒன்றின் அடிப்படையில், காங்கிரஸ் எம்.பிக்களில் 44 பேர், பா.ஜ.க எம்.பிக்களில் 44 பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment