Friday, 9 September 2011

ராஜகோபாலன் கொலை! நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்!

மதுரை மீனாட்சி கோவிலைச் சுற்றி கடைகள் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன. இதில் அன்றைய ஆளும் கட்சியினர் ஆதரவோடு தான் கடையை வைத்துள்ளோம் என்று கடை வைத்துள்ளவர்கள் கூறியுள்ளனர்.



இதையடுத்து இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் தலைமையில் கடைகளை அப்புறப்படுத்துமாறு போராட்டம் நடத்தி, சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதனால் கோபப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் கூலிப்படையை தயார் செய்தது. அதிகாலையில் வீட்டில் செய்தி தாள் படித்துக்கொண்டிருந்த ராஜகோபலனை, பால் கொடுக்கப் போவதாக கூறி வீட்டினுள் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்தனர்.

சம்பவ இடத்திலேயே ராஜகோபாலன் பலியானார். அப்போது இந்தியாவின் துணை பிரதமராக இருந்த பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட பலர் மதுரைக்கு நேரில் வந்து ராஜகோபலன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் இந்த சம்பவம் நடந்த 10.10.1994 அன்று முதல் 3 மாதம் பதட்டமாகவே இருந்தன மதுரை.  இந்த வழக்கு தொடர்பாக அன்றைய ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலரை போலீசார் விசாரணை செய்தனர். (நன்றி: நக்கீரன்)

 ஹிந்து முன்னணி ராஜகோபாலன் கொல்லப்பட்டதும்  அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். பார்ப்பன ஏடுகள் இந்த கொலையை செய்தது முஸ்லிம்கள் என்று பக்கம் பக்கமாக கவர் ஸ்டோரி போட்டார்கள். இந்த வழக்கில் ராஜா உசேன், சீனி நைனா முஹம்மது, மற்றும் பலர் சிறையில் பலவருடங்கள் அடைக்கப்பட்டார்கள். பல முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது.

இப்பொழுது உண்மை வெளிவருகிறது இது கோவில் நிலத்தில் கடை வைத்திருந்த ஆக்கிரமிப்பாளர்கள் செய்த கொலை என்று. அதற்குள் முஸ்லிம்கள், முஸ்லிம் இயக்கங்கள் என்று தினமணி, தினமலர் போன்ற ஏடுகள் எழுதி முஸ்லிம்களை குற்றப்பரம்பரை ஆக்கி வேடிக்கை பார்த்தார்கள். என்று மதவெறி ஒழிந்து மனித நேயம் மலருமோ!

No comments:

Post a Comment