Friday, 9 September 2011

ரஷ்ய விமான விபத்து : முன்னணி ஐஸ் ஹாக்கி வீரர்கள் 36 பேர் பலி

நேற்று ரஷ்யாவின், யாரோஸ்லாவ்ல் பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியான ஐஸ் ஹாக்கி வீரர்களுக்கு உலகெங்கிலும் இருக்கும் ஹாக்கி விளையாட்டு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


படம்: விபத்து நடந்த இடத்தில் ரஷயப் பிரதமர் அஞ்சலி செலுத்துகையில்

தலைநகர் மாஸ்கோவின் வடமேற்காக சுமார் 186 கி.மீ தொலையில் இருக்கும் யாரோஸ்லாவ்ல் பகுதியில் டுனோஷ்னா விமான நிலையத்திலிருந்து 45 பயணிகளுடன் - சோவியத் எரா 42 - விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகி அருகில் உள்ள ஆற்றில் வீழ்ந்தது.


இதில் ரஷ்யாவின் முன்னணி லீக் அணியின் ஹாக்கி வீரர்கள் 36 பெரும், விமான ஊழியர்கள் 7 பேரும் உயிரிழந்தனர். ஒரு ஹாக்கி வீரரும், ஒரு ஊழியரும் மாத்திரமே உயிர் தப்பினர். இவ்விமான விபத்திற்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. விசாரணைகளை முடக்கிவிடுமாறு பிரதமர் திமித்தி மெத்வெடேவ் உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களில் கனேடியன் ஹாக்கி கோச் மெக் கிரிமொன், சுவீடன் நாட்டு ஒலிம்பிக் சாம்பியன் ஸ்டீபன் லிவ் ஆகியோரும் அடங்குவர்.

மாநிலங்களுக்குடையிலான ஐஸ் ஹாக்கி லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவர் தயாராகியிருந்தனனர். குறித்த லீக் அணியின் ரசிகர்கள் பலர், போட்டிகள் நடைபெறவிருந்த ஹாக்கி மைதானத்துக்கு மெலுழுதிரிகளுடன் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


No comments:

Post a Comment