Tuesday 2 August 2011

போட்டோ சாப் இன் அடிப்படையை விரிவாக தமிழில் கற்றுக்கொள்வதற்கு - பயனுள்ள வலைப்பதிவு

போட்டோ ஷாப் ஒரு பவர்புல் அப்பிளிகேஷன்.  போட்டோ ஷாப்பில் அடிப்படைகளை கற்று விட்டால் பின்னர் இலகுவாக பயன்படுத்திக்கொள்ளலாம். கற்பதற்கு ஆசை அத்துடன் நேரமும் இருக்கிறது என்றால் உங்களுக்காக இருக்கிறது இந்த வலைப்பதிவு.


துபாயில் வசிக்கும் கான் என்பவர் போட்டோசாப் பற்றிய அடிப்படை தகவல்களை அழகிய தமிழில் 1முதல் 60 பாடங்களாக தொகுத்து வைத்துள்ளார்.


அதில் 1 முதல் 24 வரையான பாடங்களை PDF பார்மட்டில்  இலவசமாக டவுண்லோட் செய்து பின்னர் பயன்படுத்தலாம் என்கிறார் கான்.

போட்டோ சாப் கற்க வேண்டுமாயின் மனதில் வைக்க வேண்டிய சில குறிப்புக்கள், முதலில் சிரமம் இருப்பது போல் தோன்றினாலும் பின்னர் இதை விட சிறந்த மென்பொருள் இல்லை என உணர்வீர்கள்.

படம் வரைய தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் போட்டோசாப் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு.

என்று புதிதாக கற்க வருபவர்களுக்கு உற்சாகம் தருகிறார் கான்.

இணைப்பு - http://tamilpctraining.blogspot.com

No comments:

Post a Comment