Tuesday, 2 August 2011

1500 பேரின் படுகொலைக்கு காரணமான மாஃபியா நபர் மெக்ஸிகோவில் கைது

சுமார் 1,500 ற்கு மேற்பட்டோரின் படுகொலையுடன் தொடர்புடைய மெக்ஸிகோவின் பிரபல போதை பொருள் கடத்தல்காரரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.



Acosta Hernandez (33) எனும் இவன், மெக்ஸிகோவின் வட சின்ஹுஹுவா மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு ஒப்புதல் அளித்தவன் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் மெக்ஸிகோவின் மிக மோசமான வன்முறை நகரமான ஜௌரேஸ் (Juarez) இல், 3000 பேரின் கொலைகளுடனும் அகொஸ்டாவுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எல் டியெகோ எனும் பெயரில் உலாவந்த இவன் ஜௌராஸ் நகர படுகொலைகளுக்கு காரணமான லா லினியா குழுவின் தலைவராகவும் பணி புரிந்துள்ளான்.


அமெரிக்கா முழுவதும் போதைபோருள் கடத்துவதில் முக்கிய வழங்குனராக, ஜௌரேஸின் சிவுடாட் நகர் காணப்படுகிறது. இந்நகரிலேயே அகொஸ்டா மாஃபியா போன்று செயற்பட்டு வந்துள்ளான்.

மேலும் அண்மையில் மெக்ஸிகோ எல்லைப்பகுதியில் நான்கு பேரின் உயிரை பலிகொண்ட கார்க்குண்டுவெடிப்பின் பின்னணியிலும் அவன் செயற்பட்டுள்ளான்.

அகொஸ்டா பற்றிய தகவல் அளிப்பவருக்கு, மெக்ஸிகோ அரசு 778,000 யூரோ சன்மானமாக வழங்கம் முன்வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment