Tuesday 7 June 2011

சவூதியில் மதுபானம் விற்ற இலங்கையருக்குக் கடும்தண்டனை...


சவூதி அரேபியாவில் வசித்துவந்த இலங்கையர் ஒருவர் அங்கு மதுபான விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டார். குற்றம் நிரூபணமானதையடுத்து அவருக்கு சவூதி அராபிய நீதிமன்றம் ஐந்து தவணைகளில் 430 கசையடிகளும் ஐந்து வருட சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
சவூதி அரேபியாவில் மதுபானம் அருந்துவதோ விற்பனை செய்வதோ முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, இச்செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்பட்டு வருகிறது.

அந்தவகையில், மது அருந்திய குற்றத்துக்கு 80 கசையடியும், விற்பனை செய்த குற்றத்துக்கு 350 கசையடிகளும் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன.
சவூதி அரேபியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் குற்றவியல் தண்டனைகள் காட்டுமிராண்டித்தனமானவை என உலகளாவிய ரீதியில் பல விமர்சனங்கள் அவ்வப்போது எழுத்தாலும், உலகில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பயங்கரக் குற்றச் செயல்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அத்தகைய கடுமையான தண்டனைகள் பகிரங்கமாக நிறைவேற்றப்படுவதே ஒரே வழி என்ற கருத்தும் பரவலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment