Tuesday 7 June 2011

க்ரிமினல் குற்றவாளியான ராம்தேவின் உதவியாளர் தலைமறைவு


புதுடெல்லி:ஊழல் மற்றும் கறுப்புப்பணத்திற்கு எதிராக உண்ணாவிரதப்போராட்டம் நடத்திய பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் பாலகிருஷ்ணா நேபாளத்தில் க்ரிமினல் குற்றவாளியாவார்.இவர் தற்பொழுது தலைமறைவாகிவிட்டார்.

ராம்லீலா மைதானத்தில் ராம்தேவ் உண்ணாவிரதப்போராட்டம் துவக்கிய நாளில் மாலை நான்குமணி அளவில் பாலகிருஷ்ணா தலைமறைவாகிவிட்டார். உண்ணாவிரத போராட்டம் துவங்கி மாலையில் முடித்துக்கொள்வதாக ராம்தேவிற்காக மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியவர் பாலகிருஷ்ணா ஆவார்.


நேபாளத்தை சார்ந்தவரான பாலகிருஷ்ணா அங்கு க்ரிமினல் வழக்கில் சிக்கி இந்தியாவுக்கு தப்பி வந்தவர். ராம்தேவுடன் நிழல்போல் தொடரும் இவர் அவருடைய நம்பிக்கைக்கு உரிய உதவியாளரும், மேலாளரும் ஆவார். இந்திய பாஸ்போர்ட்டை பெற்ற இவர் ராம்தேவுடன் வெளிநாடுகளுக்கும் பயணித்துள்ளார். பதாஞ்சலி யோகாபீட ஆயுர்வேத மருத்துவ துறையின் தலைவராக ஆயுர்வேத மருத்துவராகவும் பாலகிருஷ்ணா பணியாற்றியுள்ளார்.70 ஆயுர்வேத மருத்துவர்கள் அங்கு இவரின் கீழ் பணியாற்றுகின்றனர்.

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்களும் இவரின் கீழ் செயல்படுகின்றனர்.பாலகிருஷ்ணா பல லட்சம் பேரின் நோய்களை குணமாக்கிய ஆயுர்வேத மருத்துவ வல்லுநர் என பதஞ்சலி யோகா பீட அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளம் அளிக்கும் விபரமாகும்.யோகாசந்தேஷ் என்ற 11 மொழிகளில் வெளியாகும் ராம்தேவின் மாத இதழின் முதன்மை எடிட்டராகவும் பாலகிருஷ்ணா உள்ளார்.

இருநூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைவர்களாக ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் உள்ளனர்.பதஞ்சலி ஆயுர்வேத லிமிட்டட், திவ்யா பார்மஸி, ஆரோக்யா ஹெர்ப்ஸ், ஜாகர்கண்ட் மெகா ஃபுட் பார்க், பாக்மஃப், வேதிக் அஷ்டபஜன் ப்ரோட்காஸ்டிங், டைனாமிக் பில்ட்கோம், பதஞ்சலி பயோ ரிசர்ச் இன்ஸ்ட்யூட் ஆகிய நிறுவனங்களும் இருவருக்கும் சொந்தமானதாகும்.
பாலகிருஷ்ணா 24 நிறுவனங்களுக்கு இயக்குநராக உள்ளார் என புலனாய்வு ஏஜன்சிக்கு தகவல் கிடைத்துள்ளது.ஹரித்துவாரில் 100 கோடி ரூபாய் செலவில் பல்கலைக்கழகத்தை இவர் துவக்கியுள்ளார்.அங்கீகாரம் இல்லாத தரம் இல்லாத மருந்துகளை இவர்கள் தயாரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராம்தேவின் திவ்யா பார்மஸியின் மருந்தில் மனிதன் மற்றும் விலங்குகளின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. ஹரித்துவாரில் பதஞ்சலி யோகா பீட அறக்கட்டளையும், ஆசிரமமும் ஸ்தாபிக்க போலி  ஆவணங்களை சமர்ப்பித்த வழக்கும் பாலகிருஷ்ணா மீது உள்ளது. பாலகிருஷ்ணா இந்திய பாஸ்போர்ட்டை பெற்றது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளையில் ராம்லீலா மைதானத்தில் நடந்த வன்முறை செயல்களுக்கு இடையே பத்துபேரை போலீஸ் கைது செய்துள்ளது.

No comments:

Post a Comment