Tuesday 7 June 2011

ராம்தேவ்: போராட்ட பந்தலை தீக்கிரையாக்கி குஜராத் மாடல் இனப்படுகொலைக்கு சதி திட்டம் தீட்டிய ஆர்.எஸ்.எஸ்-திடுக்கிடும் தகவல்


புதுடெல்லி:ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக ஹைடெக் உண்ணாவிரத போராட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு பாபா ராம்தேவின் ராம்லீலா மைதான போராட்ட பந்தலை தீக்கிரையாக்கி குஜராத் கோத்ராவில் ரயில் எரிப்பை தொடர்ந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக இனப்படு கொலை செய்தது போல் இனப்படு கொலைக்கு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் சதித்திட்டம் தீட்டிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.


ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு போராட்ட பந்தலுக்கு தீ வைத்துக்கொளுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டது. இதனைக் குறித்த ரகசிய தகவல் கிடைத்தவுடன் புலனாய்வு பிரிவு அரசுக்கு உடனடியாக தெரிவித்தது. இதன் அடிப்படையில் போராட்ட பந்தலில் இருந்து ஆட்களை வெளியேற்ற போலீஸ் நடவடிக்கையை மேற்கொண்டது மத்திய அரசு.

புலனாய்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியான செய்தி உண்மையானது என சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி தெரிவித்துள்ளார்.
இதனை குறித்து ஷப்னம் ஹாஷ்மி கூறியதாவது:போராட்ட பந்தலை தீ வைத்துக்கொளுத்த எல்லா தயாரிப்புகளையும் ஆர்.எஸ்.எஸ் நடத்தியதாக புலனாய்வுகள் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் பின்னணியில் நாடு முழுவதும் மத கலவரத்தை உருவாக்குவது தான் சங்க்பரிவாரின் லட்சியம் என அவர்கள் சுட்டி காட்டினர்.

மேலும் தெளிவான தகவல்களை தெரிந்த மத்திய அரசு அதனைக குறித்து மக்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிட தயாராக வேண்டும். உண்ணாவிரத பந்தலுக்கு தீவைத்து கொளுத்திவிட்டு தொடர்ந்து உருவாகும் வகுப்புவாத மோதல்கள் ஆதாயம் பெற்று நாட்டில் வகுப்புவாத பிரிவினையை உருவாக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் தந்திரம்.

அதனை மத்திய அரசு போலீஸ் நடவடிக்கை மூலம் தகர்த்துவிட்டது. இவ்வாறு கூறிய ஷப்னம் ஹாஷ்மியிடம் ஆர்.எஸ்.எஸ்ஸின் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் உள்ளதா? என கேள்வி எழுப்பியபொழுது ஹாஷ்மி,’முன்னர் காவி பயங்கரவாதத்தை குறித்து நாங்கள் கூறியபொழுது எல்லோரும் ஆதாரங்களை கேட்டனர். ஆனால் அது உண்மை என நிரூபிக்கப்பட்டது’ என்றார்.

மேலும் அவர்,’அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை எழுப்பி சமூக துறையில் தனது 30 ஆண்டுகால வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்த நான் ஒரு முட்டாள் அல்ல’ என அவர் தெரிவித்தார். ஆனால் ஆதாரங்களை வெளியிட இயலாது என அவர் தெரிவித்துள்ளார். இத்தகையவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு நாட்டின் மதசார்பற்ற கொள்கையை பாதுகாப்பது அரசின் கடமை என ஹாஷ்மி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தீவைத்துக்கொளுத்தி கரசேவகர்களை தீக்கிரையாக்கிய சம்பவத்திற்கு பின்னணியில் சங்க்பரிவார் அமைப்பு செயல்பட்டதாக சில புலனாய்வு குழுக்கள் கண்டறிந்தன.

கோத்ரா சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக கொலைச்செய்த இந்திய வரலாற்றிலேயே மிகக்கொடூரமான இனப்படுகொலை அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment