Friday 20 May 2011

.பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைன் பதிவு 15 நாள்களுக்குள் பள்ளியில் பதிவு செய்பவர்களுக்கு ஒரே சீனியாரிட்டி எழுத்துரு அளவு

வெள்ளி, 20 மே 2011

சேலம், மே 20- தமிழகத்தில் மே 9ஆம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. மே 25ஆம் தேதி மதிப்பெண் சான் றிதழ்கள் வழங்கப் பட உள்ளது. மாண வர்கள் மதிப் பெண் சான்றிதழ் பெற்ற உடனே, கல்வித் தகுதியை பதிவு செய்ய அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங் களுக்கு படையெடுப்பது வழக்கம். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

இந்த சிரமங்களை தவிர்க்க படித்த பள்ளிகளிலேயே ஆன் லைன் மூலம் பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. வரும் 25ஆம் தேதி மதிப்பெண் சான் றிதழ் வழங்கப்பட்ட உடன், மாணவர் கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே கல்வித்தகுதியை பதிவு செய்யலாம்.


வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்ககம், முதன்மை கல்வி அலுவ லர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்று புதிதாக பதிவு செய்ய வரும் மாண வர்கள் கட்டாயம் குடும்ப அட்டை எடுத்துச்செல்ல வேண்டும். ஏற்கென வே எஸ்எஸ்எல்சி தேர்ச்சியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மாண வர்கள், அப்போது வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட் டையை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.

மாணவர்கள், மதிப்பெண் சான் றிதழ் பெற்ற நாளில் இருந்து 15 நாள்களுக்குள் புதிய பதிவு மற்றும் கூடுதல் பதிவையும் செய்து கொள் ளலாம். 15 நாள்களுக்குள் பள்ளியிலேயே பதிவு செய்பவர் களுக்கு, 25.5.2011 என்ற ஒரே பதிவுமூப்பு தேதியே வழங்கப்படும். -இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழக்கமாக கல்வித்தகுதி மட்டுமே பதிவு செய்யப்படும். இந்த ஆண்டு முதன்முதலாக பதிவு தாரர்களின் செல்போன் எண்ணும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என வேலை வாய்ப்பு பயிற்சி இயக்ககம் உத்தர விட்டுள்ளது. செல்போன் எண் இல்லாத மாணவர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் செல்போன் எண் ணைக் குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment