Friday 20 May 2011

மஸ்ஜிதுல் அக்ஸாவை மூட இஸ்ரேல் சதிவலை

Al-aqsa-mosque01_cropped

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகார சபை, ஜெருசலத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவில் பாங்கு சொல்வதை தடை செய்ய முயன்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மஸ்ஜிதுல் அக்ஸாவில் ‘அதான்’ சொல்வது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேறிகளை தொந்தரவு பண்ணுவதாகவும்,நடு நிசியில் தமது தூக்கத்தை கலைப்பதாகவும் அவர்கள் கடந்த ஒரு வருடமாக முறையிடுவதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெருசலத்தில் உள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேறிகளில் ஒரு குழுவினர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினால் பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலிய சிப்பாயை  விடுவிக்கும் வரை மஸ்ஜிதுல் அக்ஸாவை மூடவேண்டும் என்றும் தெரிவித்து வருவதாகவும் பலஸ்தீனர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்கு கரையில் இருந்து வரும் 15 வயதுக்கு மேற்பட்ட எவரும் ஜெருசலத்தில் தொழுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. 50 வயதை கடந்தவர்களும் , விசேச அனுமதி பத்திரம் பெற்றவர்களும் மட்டும் அங்கு தொழுவதற்கு அனுமதிக்கபடுகின்றனர்.
 மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு கீழ் தோண்டி வரும் சுரங்கத்தால் ஏற்கனவே மஸ்ஜிதுல் அக்ஸா வெடிப்பு எடுக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் ‘அதானை’யும் தடை செய்து மஸ்ஜிதுல் அக்ஸாவையும் மூடிவிடும் ஆபத்தை தாம் எதிர்கொள்வதாக பலஸ்தீனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இஸ்ரேல் வெளிவரும் Haaretz என்ற பிரபல பத்திரிகை இஸ்ரேல் 140,000 பலஸ்தீனர்களின் குடியுரிமையை பறித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 1967 -1994 காலப் பகுதியில் பலஸ்தீனில் இருந்து வெளியேறி 6 வருடங்களுக்கு மேல் திரும்பி வராமல் தமது குடியுரிமையை புதுப்பிக்காத பலஸ்தீனர்கள் குடியுரிமையை இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் ஜெருசலத்தில் 7ஆண்டுகள் ஜெருசலத்தை விட்டு வெளியில் வசித்தவர்கள் ஜெருசலத்தில் மீண்டும் குடியேரும் உரிமையை இன்றும் இழந்து வருகின்றனர்.
 இவர்கள் திரும்பிவரும்போது அங்கு மீண்டும் குடியேற அனுமதிக்கப்படாத ஆக்கிரமிப்பு அராஜகம் இன்றும் தொடர்கின்றது என்பது குறிபிடத்தக்கது.

No comments:

Post a Comment