Monday 24 October 2011

கோவை: மேயர் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய SDPI கூட்டணி!


  
கோவை மேயர் தேர்தலில் மற்ற அரசியல் கட்சிகள் யாரும் எதிர்பாராத சிறுபான்மை கூட்டணி வேட்பாளர் அமீர் அல்தாப் 36 ,000 ஓட்டுகளை பெற்றுள்ளார். கோவை மேயர் தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க, கூட்டணி யில் மார்க்சிஸ்ட், ம.தி.மு.க, பா.ஜ.க, பகுஜன் சமாஜ் என பல்வேறு கத்சியால் தனித்தனியே களமிறங்கின. அ.தி.மு.க. வேட்பாளர் திரு.வேலுசாமி 2 ,81 ,728 வாக்குகள் பெற்று வெற்றிபெட்டுள்ளர். 


தி.மு.க. வேட்பாளர் திரு.கார்த்திக் 1 .53 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். மற்ற அனைத்து கட்சி வேல்பாலர்களும் 40 ஆயிரத்துக்கும் குறைவாகவே வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் 36 ,000 வாக்குகள் பெற்ற ஒரே வேட்பாளர் SDPI கூட்டணியை சேர்ந்த அமீர் அல்தாப் மட்டுமே. பல்வேறு கட்சிகளை பின்னுக்கு தள்ளி SDPI கூட்டணி வாங்கிய ஓட்டுகள் காங்கிரஸ்,மார்க்சிஸ்ட், ம.தி.மு.க, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கும் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 


சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகள் மட்டுமில்லாமல் பரவலாக அவருக்கு மற்ற கட்சிகளுக்கு இணையாக ஓட்டுகள் பதிவாகியிருப்பதை அறிய முடிந்தது. சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சராசரியாக ஒரு வாகுட்சாவடியில் 300 க்கும் மேற்பட்ட வாக்குகள் SDPI கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக கிடைத்துள்ளன. கோவையில் SDPI யுடன் பல்வேறு சிறுபான்மை அமைப்புகள் இணைந்து அமீர் அல்தாபை வேட்பாளராக நிர்ணயித்தனர். 


கோவை மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீட்டில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை தாழ்த்தப்பட்டோர், மாற்றம் பெண்களுக்கு ஒதுக்கியதில் அதிர்ப்த்தி ஏற்பட்டு 2 வார்டுகளில் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடந்தன. இதில் தீர்வு ஏற்படாததால் அந்த வார்டுகளில் தங்களின் அதிர்ப்தியை ஏற்படுத்த மக்கள் அனைவரும் மேயர் வேட்பாளருக்கு மட்டுமே ஓட்டுப் போட்டுள்ளனர்.

1 comment:

  1. Assalaamu alaikum Varah...
    do you have connected with kovai sdpi?
    just ask them about kovai Election details...

    I think this is called Indian politics...
    We should reflect ISLAM in all way..
    INCLUDING POLITICS, MEDIA etc...

    FEE AMAANILLAH...

    ReplyDelete