Monday, 24 October 2011

துனீஸிய தேர்தல் களத்தில் தனது எழுச்சியை நிரூபிக்கும் கட்சிகள்

துனீஸியாவில் மக்கள் எழுச்சி ஏற்பட்டு 9 மாதங்களில் பின்னர் இன்று பொதுத் தேர்தல் இடம்பெற்றுள்ளது. துனீஸியாவில் சட்ட சபைக்கான 217 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 44 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.



217 உறுபினர்களை தேர்வு செய்வதற்காக 81 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் பல ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் சுயேட்ச்சை குழுக்களில் போட்டியிடுகின்றனர்.  தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் நாட்டின் புதிய அரசியல் யாப்பை வரைவார்கள் அதேபோன்று இவர்கள் யாப்பு வரையப்படும் வரை ஒரு இடைக்கால ஜனாதிபதியையும் , நிர்வாகத்தையும் ஏற்படுத்துவார்கள் என்று அறிவிக்கப்பபட்டுள்ளது.

இந்த தேர்தலில் ஷெய்க் ராஷித் அல் கனூஷி தலைமையிலான அந்நஹ்ழா இஸ்லாமிய கட்சி 30 வீதமான ஆசனங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இன்று அமைதியாக நடைபெற்று முடிந்துள்ள தேர்தலுக்கான முடிவுகள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

22 ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பியுள்ளார் ஷெய்க் ராஷித் அல் கனூஷி தலைமையிலான கட்சி மிகவும் வேகமாக வளர்ந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். துனீசியாவின் 22 மாகாணங்களில் 20 மாகாணங்களில் தனது அலுவலகங்களை திறந்துள்ள அந்நஹ்ழா அனைத்து பிரதேசங்களிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது மதச்சார்பற்ற கட்சியான  PDP- Progressive Democratic Party அதிகமான பெண்வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தமது கட்சிக்கு பிரதான சவாலாக அந்நஹ்ழா விளங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டை 23 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி நடத்திய பின் அலி நாட்டை விட்டும் ஓடியதை அடுத்து சர்வாதிகாரியினால் ஷெய்க் ராஷித் அல் கனூஷிக்கு வழங்கப்பட்ட ஆயுள் கால சிறை தண்டனை உத்தியோகபூர்வமாக ரத்து செய்யப்பட்டு இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர்  நாடு திரும்பினார்.

இவரின் இஸ்லாமிய அரசியல் கட்சியான அந்நஹ்ழா கடந்த 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பலமான மக்கள் ஆதரவை வெளிப்படுத்தி பின் அலியின்  RCD-Constitutional Democratic Rally க்கு அடுத்த இடத்தை பாராளுமன்றத்தில்  பெற்று பிரதான எதிர் கட்சியாக உருவெடுத்தது ஆனால் அந்நஹ்ழா கட்சி பின் அலி அரசால் தடை செய்யப்பட்டு இதன் தலைவர் ஷெய்க் ராஷித் அல் கனூஷி ஆட்சியை கவிழ்க்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். எனினும் இவர் நாட்டை விட்டும் ஏற்கனவே வெளியேறிவிட்டதால் தண்டனைக்கு உட்படவில்லை பின் அலியின் அரசு இஸ்லாத்துடன் தொடர்புடைய கட்சிகளுக்கு கடந்த 22 ஆண்டுகளாக தடை விதித்திருந்தது.

தற்போது பின் அலியின் Constitutional Democratic Rally (RCD) இல்லாத நிலையில் மதச்சார்பற்ற கட்சியான PDP- Progressive Democratic Party என்ற கட்சிக்கும் அந்நஹ்ழாவுக்கும் மிடையில் கடுமையான போட்டி எதிர்பார்க்கப்படுகின்றது. முடிவுகள் நாளை வெளியாகின்றது.

No comments:

Post a Comment