இந்த தேசத்தை அந்நியர்களிடம் அடமானம் வைப்போம்!
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுப்போம்!
இந்தியாவில் ஜாதிக்கொடுமையை ஒழிய விடமாட்டோம்!
சிறுபான்மை மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை கொடுக்கமாட்டோம்!
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுப்போம்!
இந்தியாவில் ஜாதிக்கொடுமையை ஒழிய விடமாட்டோம்!
சிறுபான்மை மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை கொடுக்கமாட்டோம்!
இந்த தேசத்தை வல்லரசாக மாற்றவிடமாட்டோம்!
ஃபசிஸசங்கப்பரிவார கூட்டத்தினருக்கு பல்லக்கு தூக்குவோம்!
இவற்றிற்காக
எங்களை எதிர்க்கும் அமைப்பாக நீங்கள் இருந்தால்….! உங்களை தடை செய்து,
உங்களை முடக்குவதற்கான எல்லா வேலைகளிலும் ஈடுபடுவோம்!
இப்படிக்கு,
இந்திய அரசாங்கம் + உளவுத்துறை + ஊடகங்கள்
ஆம்! இதுதான் இன்றைய நிலை….
சுதந்திரம்,
நீதி, பாதுகாப்பு இந்தியாவில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் கிடைக்க
வேண்டும் என்ற அடிப்படையில், ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களை ஒன்று
திரட்டி புதிய பாதையில் புதிய இந்தியாவை உருவாக்கும் பாரதூரமான பணியை
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்டு வருகிறது. இது
ஆட்சியாளர்களுக்கும், ஆதிக்க வர்கத்தினருக்கு இனிக்கவா போகிறது?
சில
வருடங்களுக்கு முன்னால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தென்
மாவட்டங்களான கேரளா, தமிழ் நாடு மற்றும் கர்நாடாகாவில் மட்டுமே இயங்கி வந்த
இயக்கமாக இருந்தது. ஆனால் அல்லாஹ்வுடைய கிருபையை கொண்டு இன்று இந்திய
தேசம் முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கால்பதித்து ஆக்கப்பூர்வமான பல
பணிகளை செய்து வருகிறது. ஒரு தேசிய இயக்கம் தன்னுடைய தேசிய அலுவலகத்தை தென்
இந்தியாவில் வைத்திருப்பது அவ்வளவு பொருத்தமாக இருக்காது என்பதனால்
சமீபத்தில் தன்னுடைய தேசிய தலைமை அலுவலகத்தை தலை நகரமாம் டெல்லிக்கு
மாற்றியது.
இதனால்
பொறுக்க முடியாத உளவுத்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய தவறான
செய்திகளை பத்திரிக்கைகளில் பிரசுரிக்க தூண்டி வருகிறது. அதன் அடிப்படையில்
டெக்கன் கிரோனிக்கல் பத்திரிக்கை இன்று பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய தவறான
பல செய்திகளை பிரசுரித்துள்ளது. நிச்சயமாக இது டெக்கன் கிரோனிக்கல்
ஆசிரியரின் தலையில் உதித்தது அல்ல என்பது நமக்கு நன்றாகவே புலப்படுகிறது.
டெக்கன் கிரோனிக்கம் வெறும் அம்புதான், அதனை எய்தவர்களோ உளவுத்துறையினர்
என்பதை யாரும் சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
நன்றி : http://adiraithunder.blogspot.com/
No comments:
Post a Comment