Tuesday, 9 August 2011

தூனீசியா, எகிப்து புரட்சிகளின் விரைவான வெற்றிக்கு அவை தலைமையை கொண்டிருந்தமை காரணம்

”நீங்கள் ஒரு தடவை சர்வாதிகார அரசாங்கங்களுடன் இணைந்துகொண்டாள் நீங்கள் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி என்பதை விட நீங்களும் அதன் அங்கமாக மாறிவிடுவீர்கள்” – ராஷித் அல் கனூஷி


தூனீசியாவின் பிரதான கட்சிகளுள் ஒன்றான அந்நஹ்ழா இஸ்லாமிய அமைப்பின் ( தூனீசியா இஹ்வானுல் முஸ்லிமீன்) தலைவரும் இஸ்லாமிய அரசியல் சிந்தனையாளருமான ஷெய்க் ராஷித் அல் கனூஷி அரபு நாடுகளின் மக்கள் அதன் அரச தலைவர்களுக்கு எதிராக புரட்சியை தொடங்குவதற்கு தேவையான அனைத்து காரணங்களும் இருப்பதாக தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்துரைகையில் இருக்கும் அரசுகளுக்குள் இணைந்து கொண்டு எவரும் அவற்றை சரிசெய்துவிட முடியாது. ”நீங்கள் ஒரு தடவை சர்வாதிகார அரசாங்கங்களுடன் இணைந்துகொண்டாள் நீங்கள் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி என்பதை விட நீங்களும் அதன் அங்கமாக மாறிவிடுவீர்கள்”  என்று கூறியுள்ளதுடன். மேலும் அவர் தூனீசியா, எகிப்து புரட்சிகளின் விரைவான வெற்றிக்கு ,அவை  யெமன், லிபியா நாடுகள் போன்று அல்லாமல்  தூனீசியா, எகிப்து புரட்சிகள்  தலமையை கொண்டிருந்ததுடன் வெளிநாட்டு தலையீட்டையும் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் எகிப்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஹுஸ்னி முபாரக் அரசுக்கு எதிரான வழக்கு தூனீசியாவை  சர்வாதிகாரியான பின் அலியின் படுகொலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தூண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தூனீசியாவின் அந்நஹ்ழா இஸ்லாமிய இயக்கம் 22 ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பி அதன் வேலைதிட்டன்களை சமூக , மற்றும் அரசியல் மட்டங்களில் மேற்கொண்டு வருகின்றது எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி தூனீசியா சட்டவாக அவைக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. தூனீசியாவின் அந்நஹ்ழா இஸ்லாமிய இயக்கம் மக்கள் மத்தியில் பாரிய செல்வாக்கை பெற்றுவருகின்றது என்பது குறிபிடத்தக்கது .

                                      ஷெய்க் ராஷித் அல் கனூஷி

நன்றி : ourumma .org

No comments:

Post a Comment