Wednesday 6 July 2011

சர்வதேச நிதியத்தின் தலைவராக லாகர்ட் பதவியேற்பு

வாஷிங்டனில் உள்ள சர்வதேச நிதியத்தின்(ஐ.எம்.எப்) முதல் பெண் தலைவராக பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்ட் நேற்று பதவியேற்றார்.

சர்வதேச நிதியத்தின் தலைவராக இருந்த ஸ்ட்ராஸ்கான் நியூயோர்க்கில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனால் பதவியை ராஜினாமா செய்தார்.


புதிய தலைவருக்கான தேர்தலில் பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்ட்டுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து ஐ.எம்.எப் தலைவராக 55 வயதான கிறிஸ்டைன் லகார்ட் அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள ஐ.எம்.எப் அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடந்த விழாவில் கிறிஸ்டியன் லகார்ட் புதிய தலைவராக பதவியேற்றார்.

அவருக்கு ஐ.எம்.எப் அமைப்பின் தற்காலிக நிர்வாக இயக்குனர் ஜான்லிப்ஸ்கே பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து இவர் ஐந்து ஆண்டுகள் பதவியில் நீடிப்பார். இவருக்கு சலுகைகள் உள்பட ஆண்டுக்கு 4 லட்சத்து 6 ஆயிரத்து 940 டொலர் சம்பளமாக கிடைக்கும்.

ஐ.எம்.எப் தலைவரின் பணி:

1. சர்வதேச வர்த்தகம் மற்றும் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்திற்கு உதவுவது.
2. நாடுகளின் நாணய பரிவர்த்தனை மதிப்புகளை கண்காணிப்பது.
3. கடன் பெற்ற நாடுகள் திரும்ப செலுத்துகின்றனவா என்பதை கண்காணிப்பது.
4. உறுப்பு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது.

No comments:

Post a Comment