Wednesday 8 June 2011

எம்பிஏ மாணவர்களுக்கு வேலை வழங்குவதற்கு போட்டி தேர்வு:நிசான் அறிவிப்பு

Muthupet-PFI
சென்னை: எம்பிஏ மாணவர்களுக்கு வேலை வழங்கும் வகையில் போட்டி தேர்வு ஒன்றை நிசான் கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனம் தனது கார் பிராண்டை இந்தியாவில் பிரபலமடைய செய்யும் வகையில், புதிய முயற்சிகளை கையாண்டு வருகிறது. இந்த வகையில், இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் படிக்கும் எம்பிஏ மாணவர்களுக்கான் போட்டி தேர்வை அந்த நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.



நிசான் பிராண்டை பிரபலபடுத்தும் வகையில் சிறந்த மார்க்கெட்டிங் நுணுக்கங்களை தெரிவிக்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நிசான் ஸ்டூடன்ஸ் பிராண்டு மேனேஜர்(என்எஸ்பிஎம்) என்ற பெயரில் இந்த போட்டி தேர்வு நடக்கிறது.

வரும் ஜூலை மாதம் 1 ந் தேதி துவங்கும் இந்த போட்டி வரும் டிசம்பர் மாதம் வரை பல கட்டங்களாக நடக்கிறது. மொத்தம் 1,200 மாணவர்கள் இந்த போட்டி தேர்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், சிறந்த நுணுக்கங்கள் தெரிவிக்கும் மாணவர்கள் 20 பேருக்கு பணிவாய்ப்பை பெற உள்ளனர்.

நிசான் ஸ்டூடன்ட் மேனேஜர் என்ற பதவியுடன் அவர்களுக்கு 6 மாதம் பணிக்கான பயிற்சி வழங்கப்படும். பயிற்சிகாலம் முடிந்தவுடன் நிசான் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் அவர்கள் பணியாற்றும் வாய்ப்பை பெறுவர்.

இந்த போட்டியில் பங்குகொள்வதற்காக நாட்டின் 15 நகரங்களில் உள்ள 150 முதன்மையான கல்வி நிறுவனங்களை நிசான் தேர்வு செய்துள்ளது. அந்த பட்டியலில் சென்னை லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட், கொல்கத்தா ஐஐஎம், டெல்லி ஐஐஎப்டி உள்ளிட்ட நாட்டின் பிரபல வணிக மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.


No comments:

Post a Comment