Wednesday, 8 June 2011

ஊழலுக்கு எதிரான இயக்கம் பாசிச சித்தாந்த்திலிருந்து விலகி நிற்க வேண்டும்-பாப்புலர் ப்ரண்ட்



Murhupet - PFI
போபால்:ஊழலுக்கு எதிரான போராட்டம் போன்ற மக்கள் போராட்டங்கள் சந்தேகத்திர்க்குரிய மற்றும் சர்ச்சைக்குரிய நபர்களாலும் மேலும் பாசிச கூட்டத்தின் போலி முகங்களாலும் கைய்யாகபடுத்தப்படுவது குறித்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மக்களை எச்சரிக்கை செய்துள்ளது.
கேரளா கேலிக்கட்டில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறப்பட்டதாவது சந்தேகத்திர்க்குரிய முறையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை குவித்துள்ள பாபா ராம்தேவ் போன்றவர்கள் ஊழலுக்கு எதிரான போராளியாக தன்னை காட்டிக்கொள்ள முயல்வது எதிர்மறையாக உள்ளது எனக் கூறியுள்ளது.




மேலும் மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்கள் ராம்தேவ் போன்ற கறைபடிந்த ஆசாமிகள் நடத்தக் கூடிய இந்த கேலிக்குரிய போராட்டத்திலிருந்து விலகி நிற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. எனினும் ராம்தேவ் போராட்த்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்த மத்திய அரசு பிறகு நள்ளிரவில் அவரை டெல்லியில் இருந்து வெளியேற்றியது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளது.

இதற்க்கிடையில் அரபு முஸ்லிம்கள் தங்களுடைய அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரதிர்க்காக போராடுவதில் ஒருமுகத்தன்மை கொண்டதாக உள்ளது என தெரிவித்தது. மேலும் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையின் படி இன்னும் முஸ்லிம் சமூகத்திற்கும் மற்ற சிறுபான்மையின மக்களுக்கும் இடஒதிக்கீடு தராமல் பாரபட்சம் காட்டுவது அதிருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் முஸ்லிம் சமூகத்திற்கு இடஒதிக்கீடு தரக்கோரி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் இந்த தேசிய செயற்குழு கூட்டம் இவ்வமைப்பின் சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment