Saturday 21 May 2011

ஆறு பலஸ்தீனர்களைக் கடத்திய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம்!



நேற்று (வியாழக்கிழமை - 19.05.2011) அதிகாலை மேற்குக் கரைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு பலஸ்தீனர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் கடத்திச் சென்றுள்ளது.

'தேடுதல் வேட்டை' என்ற போர்வையில் அதிகாலை நேரத்தில் பலஸ்தீனர்களின் வீடுகளில் அத்துமீறிப் பிரவேசித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், அவ்வீடுகளில் இருந்த பெண்களையும் குழந்தைகளையும் அச்சுறுத்திப் பெரும் அட்டகாசம் புரிந்ததாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


ஆக்கிரமிப்பு இராணுவத்தினால் கடத்திச் செல்லப்பட்டவர்கள் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் வதைமுகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நஃப்ஹா சிறைச்சாலையில் உள்ள பலஸ்தீன் கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகளின் அடாவடி நடவடிக்கைகளை எதிர்த்துத் தாம் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தர முன்வருமாறு மனித உரிமைகளை மதிக்கும் அனைத்துத் தரப்பினரையும் நோக்கி பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.

பலஸ்தீன் கைதிகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகத்திடம், 'கைதிகளை வருடக்கணக்காக ஒடுங்கிய சிறைக் கொட்டடிகளில் தனிமைச் சிறையில் அடைத்துவைத்தல், உறவினரைச் சந்திக்க அனுமதி மறுப்பு, போதிய மருத்துவ வசதி முதலான அடிப்படைத் தேவைகளைச் செய்துகொடுக்க மறுத்தல், கொடூரமான தண்டனை முறைகளை அமுல்நடாத்தல் முதலான மனித உரிமைகளை மறுதலிக்கும் சிறைச்சாலை நடைமுறைகளை மாற்றுமாறு' கோரியே தமது உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment