Monday 23 May 2011

முல்லா உமர் கொல்லப்பட்டாரா?-தாலிபான் மறுப்பு


இஸ்லாமாபாத்:தாலிபான் தலைவர் முல்லாஉமர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் தாலிபான் இதனை மறுத்துள்ளது. ஆப்கானின் தனியார் தொலைக்காட்சி  சேனலான டோலோ (tolo) உமர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டது.

குவாட்டாவிலிருந்து வஸீரிஸ்தானிற்கு சென்று கொண்டிருக்கும் போது குண்டடிபட்டு இறந்ததாக அச்செய்தி கூறுகிறது. தாலிபானின் ஆன்மீக தலைவரும், ஆப்கானின் உரிமைகளுக்காக போராடும் போராளி தான் முல்லா உமர். செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் 2-வது இடத்தில் முல்லா உமர் உள்ளார். இவரை பிடிக்க அமெரிக்கா பல ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இதுவரை இயலவில்லை.

முல்லா உமரின் தலைக்கு அமெரிக்கா ஒரு கோடி டாலர் பணத்தை பரிசாக அறிவித்திருந்தது. தாலிபானின் செய்தி தொடர்பாளர் ஸஃபியுல்லாஹ் முஜாஹித் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ’இது பொய்யான பரப்புரையாகும். முல்லா உமர் ஆப்கானிஸ்தானில் நலமாக உள்ளார். முஜாஹிதீன்களை வழிநடத்துகிறார்.’ என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment