இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து தனது அருமை மகனையே அறுத்துப் பலியிடத் துணிந்த இப்ராஹீம் நபி அவர்களின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக உலக முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். இந்த தியாக உணர்வும் இறை அச்சமும் நம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.
குர்பானி கொடுக்கும் பிராணிகளின் மாமிசங்களை மதச்சடங்குகளுக்காக ஒதுக்கி வைக்க குர்ஆன் கட்டளையிடவில்லை மாறாக, “...அதிலிருந்து(இறைச்சியை) நீங்களும் உண்ணுங்கள், கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக்கொடுங்கள்”(அல்குர்ஆன் 22:28) என்று கூறுவதன் மூலம் மக்களுக்கான உணவை பதுக்கி வைக்க அனுமதியில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறது.
அச்சுறுத்தலை முக்கிய அரசியல் கருவியாக கொண்டே அமெரிக்காவும், இஸ்ரேலும், ஹிந்துத்துவா பாசிஸ்டுகளும் மக்களை ஆள நினைக்கிறார்கள். நமது நாட்டில் பாசிஸவாதிகள் அச்சுறுத்தல் அரசியலையே முன்னிறுத்துகிறார்கள். பழைய குஜராத்தும், புதிய முஸஃபர் நகரும் அதற்கு உதாரணங்களாகும். முஸ்லிம்களை அச்சுறுத்தும் நோக்கில் அப்பாவிகள் மீது தீவிரவாத பழி சுமத்தி , பொய் வழக்குப் போட்டு, கருப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்து பல்லாண்டுகளாக சிறையில் அடைக்கும் நிகழ்வுகள் இன்று தொடர் கதையாகிவிட்டது.
அநீதியான ஆட்சியாளருக்கு முன்னால் இப்ராஹீம் நபி அவர்கள் வெளிப்படுத்திய துணிச்சல் மிக்க அரசியலை நாம் பாடமாக கொள்ள வேண்டும். இங்கேதான் “அச்சமற்ற அரசியல்” என்ற கொள்கை வெகுஜனமயமாக்கப்படுவதற்கான முக்கியத்துவத்தை தியாகத் திருநாள் நமக்கு உணர்த்துகிறது. தியாகத் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் வேளையில் இப்ராஹீம் நபி அவர்களின் வரலாறு நமக்கு சமகால நிகழ்வுகளுக்கு பாடமாக அமையவேண்டும்.
இந்த தியாகத் திருநாளில் நமது நாட்டில் நீதி நிலைபெறுவதற்கும், முஸ்லிம் சமூகம் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் அடைவதற்கும் தியாகம் செய்ய உறுதியெடுத்துக் கொள்வோமாக. இந்த நன்னாளில் எல்லா சமூக மக்களும் சந்தோஷமாகவும் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாகவும் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
அனைவருக்கும் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!!
இப்படிக்கு
ஏ.எஸ்.இஸ்மாயீல்
மாநில தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
இப்படிக்கு
ஏ.எஸ்.இஸ்மாயீல்
மாநில தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
No comments:
Post a Comment