Friday 30 August 2013

முத்துப்பேட்டை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வளர்ச்சியை கண்டு அலறும் பா.ஜா.க.!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. வருடாவருடம் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தை தூண்டி அதன் மூலம் மக்களின் இயல்பு வாழ்கையை பாதிக்க செய்வதுதான் வழக்கம். ஆனால் இந்த வருடம் ஊர்வலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பரபரப்பு ஆரம்பமாகிவிட்டது.


முஸ்லிம்களின் புனித நாளான பெருநாள் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு பள்ளிவாசல் முன்பு வெடிகளை வெடித்து தவறான கோசங்களை எழுப்பி கூச்சல்போட்டனர். இதனை எஸ்.டி.பி.ஐ. தலைமையில் முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றிணைந்து நின்றதால் பா.ஜா.கவின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விநாயகர் ஊர்வலத்தை அமைதியான முறையில் நடத்துவதற்காக கலந்தாய்வு கூட்டம் தாசில்தார் ராஜகோபால் தலைமையில் நேற்று நடைபெற்றது. 

இதில் பா.ஜா.க மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

பா.ஜா.காவின் சூழ்ச்சியை முறியடித்து மற்றும் இந்தியா முழுவதும் எஸ்.டி.பி.ஐ.யின் வளர்ச்சியை கண்டு பா.ஜா.க. பயத்தில் நடுங்கி கொண்டிருப்பது இதன் மூலம் தெரியவருகிறது. 

இதனை தொடர்ந்து, ஒரு தேசிய அரசியல் கட்சியின் மீது அவதூறு தெரிவித்து பேசிய பா.ஜா.கவை கண்டித்து திருவாரூர் மாவட்ட பொதுசெயலாலர் நெய்னா முகம்மது அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். 


No comments:

Post a Comment