Thursday 1 December 2011

இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம் சென்னை. சர்வதேச ஆய்வில் தகவல்..


உலகத்தில் மக்கள் பாதுகாப்புடன் வாழ ஏற்ற நகரங்கள் எது என்று ஆண்டுதோறும் மெர்சர் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிறுவனம் இந்த ஆண்டு மொத்தம் 221 நகரங்களில் ஆய்வு நடத்தியது.
 
இதில் பெல்ஜியத்தில் உள்ள லக்சம்பர்க் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை நகரம் 108-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் தனி மனித பாதுகாப்பு மிகுந்த நகரங்களில் சென்னைக்கே முதலிடம் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது பெங்களூர்.
 
மெர்சர் நிறுவன ஆய்வுப்படி சர்வதேச அளவில் இதற்கு 117-வது இடம் கிடைத்துள்ளது. டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு 127-வது இடம் கிடைத்துள்ளது. 2 நகரங்களும் ஒரே இடத்தில் உள்ளது. மும்பை 142-வது இடத்தை பிடித்துள்ளது.  
 
இதே போல் அமைதியான சுற்றுச்சூழல், செலவு, கட்டமைப்பு, போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி கொண்ட வாழ்வதற்கு ஏற்ற நல்ல நகரங்கள் எது என்பது பற்றியும் மெர்சர் நிறுவனம் ஆய்வு நடத்தியது.
 
இதில் ஆஸ்திரியா நாட்டின் தலைநகரம் வியன்னா முதலிடத்தை பிடித்துள்ளது. 2-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜூகுரிச் நகரம், 3-வது இடத்தை நியூசிலாந்தின்- ஆக்லாந்து நகரம் பெற்றுள்ளது. வழக்கமாக முதலிடத்தில் இருக்கும் சிங்கப்பூர் இந்த ஆண்டு 25-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. பெங்களூருக்கு 141-வது இடம் கிடைத்துள்ளது.
 
இந்தியாவைப் பொறுத்தவரையில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த இடங்களில் பெங்களூர் முதலிடத்தை பிடித்துள்ளது. டெல்லி 2-வது இடத்தையும், மும்பை 3-வது இடத்தையும், சென்னை 4-வது இடத்தையும், கொல்கத்தா 5-வது இடத்தையும் பிடித்துள்ளது.
 
சர்சதேச அளவில் டெல்லி 143-வது இடம், மும்பை 144-வது இடம், சென்னை 150-வது இடம், கொல்கத்தா 151-வது இடத்தில் உள்ளது.
as
source-thedipaar.com

No comments:

Post a Comment