Thursday, 1 December 2011

பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சி.பி.ஐற்கு மாற்ற வேண்டும் : எஸ்.டி.பி.ஐ கோரிக்கை.




பரமக்குடியில் தலித்துகள் மீதான் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையை தலா ஒரு இலட்சம் என தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.

எஸ்.டி.பி.ஐ சார்பாகவும் நிவாரண தொகையை உயர்த்தி வழங்குவதோடும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

தற்போது உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அறிவித்த நிவாரண தொகை தலா ஒரு இலட்சத்தை ரூபாய் ஐந்து இலட்சமாக உயர்த்தியும் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி தமிழக முதல்வர் உத்தரவிட்டதை வரவேற்கிறேன்.

அதே சமயம் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிக்க அரசு நியமித்த நீதிபதி சம்பத் தலைமையிலான விசாரனை ஆணையத்தை பாதிக்கப்பட்ட மக்களும் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஏற்க்கவில்லை என்பதை மனதில் கொண்டு துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிக்க சி.பி.ஐக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டுமெ என மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு மாநில ஊடக தொடர்பாளர் தன்வீர் செய்திக்குறிப்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

1 comment:

  1. நீங்கள் செய்யும் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.
    அல்லாஹ் உங்களுக்கு மேலும் வெற்றியை தருவானாக.

    எது எப்படியோ சகோதரர்களே..... ஜெயா அம்மா இப்பொழுது பிரதமர் பதவி கனவு கண்டு கொண்டிருக்கிறார். கனவு களைவதற்கு முன் கொஞ்சம் கூடுதல் முயற்சி செய்து உங்கள் போராட்டத்தை வலுப்படுத்தலாம்.

    ReplyDelete