Tuesday 1 November 2011

குல்பர்கா: பிரம்மாண்டமான அணிவகுப்புடன் நடைபெற்ற‌ மாநாட்டிற்கான பிரச்சாரம்

குல்பர்கா: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குல்பர்கா மாவட்டதின் சார்பாக அணிவகுப்புடன் கூடிய மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நேஷனல் கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

அடுத்த மாதம் (நவம்பர்) 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் "சமூக நீதி மாநாடு" நடக்க இருக்கிறது இன்ஷா அல்லாஹ்! இதன் பிரச்சாரம் நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் ஃபாசிஸ கட்சியான பா.ஜ.க ஆளும் மாநிலமான கர்நாடகாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கான ஆதரவும், சமூக நீதி மாநாட்டிற்கான ஆதரவும் பெருகி வருகிறது. நீதிக்காக போராட பெருமளவில் மக்கள் பாப்புலர் ஃப்ரண்டோடு கைகோர்த்து வருகின்றனர். மாநாட்டிற்கான பிரச்சாரம் நடக்கும் ஒவ்வொரு இடங்களிலும் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

SJC Gulbarga

 கடந்த 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு சுதந்திர தின அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்து வருகிறது கர்நாடக அரசாங்கம். இந்த முறை கடுமையான போராட்டத்திற்கு பிறகு மாநாட்டிற்கான பிரச்சாரம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் "நீதியின் போராளிகள்" குல்பர்காவின் வீதிகளில் வீரநடை போட்டு மாநாட்டிற்கான பிரச்சாரத்தை துவக்கினர்.

SJC Gulbarga
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் மெளலானா உஸ்மான் பேக், கர்நாடக மாநில துணைத்தலைவர் அப்துல் வாஹித் சேட், மாநில செயற்குழு உறுப்பினர் ரஜாக் கெம்மாரா, ஃபரூக்குர் ரஹ்மான், மற்றும் குல்பர்கா மாவட்ட தலைவர் ஷாஹித் நஜீர் உட்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். சரியாக மாலை 5:30 மணி அளவில் குல்பர்கா கோட்டை அருகே அணிவகுப்பு தொடங்கியது. மார்கெட் மற்றும் முக்கிய வழியாக சென்ற அணிவகுப்பும் அதனை தொடர்ந்த பேரணியும் பொதுக்கூட்டம் நடைபெற்ற நேஷனல் கல்லூரி மைதானத்தை வந்தடைந்தது.


SJC Gulbarga
 
ஷாஹித் நஜீர் குல்பர்கா மாவட்ட தலைவர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

SJC Gulbarga


SJC Gulbarga


SJC Gulbarga

SJC Gulbarga

SJC Gulbarga

No comments:

Post a Comment