Wednesday, 25 May 2011

கணவனுக்குக் கட்டுப்படுதல்...


ஒரு பெண் எப்போதிருந்து கணவனுக்கு கட்டுப்படவேண்டும்?
ஒரு பெண் தனது கணவனுக்கு கட்டுப்படுவது கடமையாகும். அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்;மனைவியரான அவர்கள்மீதுள்ள கடமைகள் போன்று அவர்களுக்கு உரிமைகளும் காணப்படு கின்றன. ஆண்களுக்கு அவர்கள்மீது ஓர் படித்தரம் உள்ளது. (பகறா: 228)
ஆண்கள் பெண்களைவிட வும் சக்திபடைத்தவர்களாவர். அல்லாஹுத்தஆலா அவர்களில் சிலரைவிடவும் மேன்மையாக்கி சிலரை வைத்திருக்கிறான். அவர்கள் தங்கள் செல்வங்களிலிருந்து பெண்களுக்காக செலவளிக்கின்றார் கள். (நிஸா: 34)
எனவேஒரு பெண் நன்மையான விடயங்களில் கணவனுக்கு கட்டுப்பட வேண்டியது அவளது கடமையாகும். பாவங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயங்களில் கட்டுப்படக்கூடாது. நபி (ஸல்) அவர்களிடம் பெண் களில் சிறந்தவர் யார்’ எனக் கேட்கப்பட்டது. அதற்கவர்அவளைப் பார்த்தால் கணவன் சந்தோசப் படக்கூடிய அவன் ஏவினால் கட்டுப்படக்கூடிய பெண்ணா வாள் என்றார்கள். (நஸாயி)
ஒரு பெண் கணவனின் வீட்டில் நுழைந்ததிலிருந்து அவனுக்கு கட்டுப்பட தொடங்க வேண்டும். அந்த வீட்டை வசதியுள்ளதாக ஆக்க வேண்டும். அல் லாஹ் மிக அறிந்தவன்.

No comments:

Post a Comment