Saturday, 28 September 2013
Thursday, 19 September 2013
முத்துப்பேட்டையில் நாளை அனைத்து ஜும்மா பள்ளிவாசலிலும் முஸாஃபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி வசூல் செய்யப்படுகிறது!
கண்ணியத்திற்குரிய ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உத்திரப்பிரதேசம் மாநிலம் முஸாஃபர் நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கி நடைபெற்ற கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 70,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Tuesday, 17 September 2013
8 மாவட்ட காவல்துறையின் உச்சக்கட்ட பாதுகாப்பில் முத்துப்பேட்டை! -இது தேவையா?
முத்துப்பேட்டையில் இன்று விநாயகர் ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, திருவாரூர், நாகை, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், புதுகோட்டை, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களின் காவல்துறையின் உச்சக்கட்ட பாதுகாப்பில் இருக்கின்றது மற்றும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனமும் இன்று முத்துப்பேட்டையை நோக்கி இருக்கின்றது.
"புனையப்பட்ட வழக்குகள், புதைக்கப்ட்ட வாழ்வுகள்" : கோவையில் நடந்த புத்தக வெளியீடு
கோவை : "அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்" என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை நடத்த இருக்கும் தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கோவையில் நடந்த துவக்க பொதுக்கூட்டத்தில் "புனையப்ட்ட வழக்குகள், புதைக்கப்ட்ட வாழ்வுகள்" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? கோவையில் எழுச்சியுடன் நடைபெற்ற துவக்க பொதுக்கூட்டம்!
கோவை : "அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்" என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடைபெறுகிறது. தொடர் பிரச்சாரத்தின் துவக்க தினமான செப்டம்பர் 15 அன்று கோவையில் மாபெரும் துவக்க பொதுக்கூட்டமும், நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெறும்.
Monday, 9 September 2013
Friday, 6 September 2013
முத்துப்பேட்டை: தொடரும் காவல்துறையின் முஸ்லிம் விரோதபோக்கு! அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து கைது செய்ய முயற்சி முறியடிப்பு!
சமீப காலமாக வீண் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துவது முத்துப்பேட்டை காவல் துறையின் நோக்கமாகவுள்ளது. அந்தவகையில் நேற்று இரவு எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில், முன்னாள் எஸ்.ஐ. பால்ராஜ் உட்பட காவல் துறையினர் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அ. அபூபக்கர் சித்திக் அவர்களின் வீட்டில் அத்துமீறி நுழைந்து கைது செய்ய முயற்சி செய்துள்ளனர்.
Sunday, 1 September 2013
முத்துப்பேட்டையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று நாடகமாடும் காவல்துறை! -அப்பாவி முஸ்லிம்கள் மீது வழக்கு பதிவு!
முத்துப்பேட்டையில் நடக்கவுள்ள சர்ச்சைக்குரிய ஊர்வலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமலிருக்க இருதரப்பிலிருந்தும் 10 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)