Monday 12 December 2011

முத்துப்பேட்டையில் SDPI சார்பில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்









 
முத்துப்பேட்டை : முத்துப்பேட்டையில் சோஷியல் டெமாக்ரடிக் கட்சி (SDPI) சார்பில் கொள்கை விளக்க மற்றும் நன்றி அறிவிப்பு பொது கூட்டம் நேற்று மாலை 7 மணியளவில் முஹைதீன் பள்ளிவாசல் திடலில் தொடங்கியது.  இக்கூட்டம்  மாவட்ட தலைவர் ஜனாப். M . தப்ரே ஆலம் பாதுஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய SDPI - யின் மாநில செயலாளர் ஜனாப். A .அபூபக்கர் சித்திக் அவர்கள், முத்துப்பேட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முஸ்லிம் மாணவர்கள் பள்ளிக்குள்  புறக்கனிக்கப்படுகிறார்கள் என்றும், ஏனெனில் மாணவர்களுக்காக உள்ள ஆசிரியர் கழகத்தில் RSS , ஃபாசிஸ்டுகளின் கூடாரமாக இருந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் முஸ்லிம் மாணவர்களை பள்ளிக்கு அனுமதி மறுத்தால் கதவுகள் உடைக்கப்படும் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

இஸ்லாமியர்களிடம் அரசியல் அதிகாரம் இல்லாததன் காரணத்தால் எல்லா துறைகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும், இன்ஷா அல்லாஹ் SDPI ஆட்சிக்கு வந்தால்தான் இஸ்லாமியர்கலுக்கு நீதி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு எந்த ஓர் அரசியல் கட்சியும் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டுத்தொடரில் குரல் கொடுக்காமல் மவுனமாக இருந்தது மிகவும் வேதனைப்பட வேண்டிய விசயமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய SDPI - யின் மாநில செயற்குழு உறுப்பினர். J . ஜாகிர் ஹுசைன் அவர்கள், இந்திய நாட்டை கொள்ளைக்காரர்களிடமிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்தை நாம் நடத்த வேண்டும் என்றும், மேலும் இந்தியாவில் 40 கோடிக்கு மேலான மக்கள் தினமும் வெறும் 20 ரூபாய் தான் சம்பாதிக்கிறார்கள் என்றும், அவர் தெரிவித்தார். ராஜேந்திர சச்சார் கமிட்டி முஸ்லிம்களின் நிலையை எடுத்துக்கூரியதை புறக்கணித்த காங்கிரஸ் அரசாங்கம் நாடகமாடி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அரசியலை நமதாக்குவோம், தேசத்தை பொதுவாக்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய SDPI - யின் தமிழ் மாநில தலைவர் KKSM . தெஹ்லான் பாக்கவி அவர்கள், சில சமுதாய மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கவும் மற்றும் அவர்களை இவைகளிலிருந்து மீட்டெடுக்கவும் தான் இந்த SDPI கட்சி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்திய நாட்டு அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்க SDPI கட்சியால் மட்டும்தான் இயலும் என்றும் அவர் தெரிவித்தார். பரமக்குடியில் தலித் மக்கள் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள் என்றும், ஆனால் இவற்றை தடுக்காமல் மன்மோகன்சிங் அரசானது மக்கள் விரோத அரசை நடத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். SDPI கட்சி ஆரம்பித்து இரண்டு வருடங்களில் 2 தேர்தல்களை சந்தித்துள்ளது என்றும், அவற்றில் 300 இடத்தில் போட்டியிட்டு 60 இடங்களை கைப்பற்றி உள்ளோம் என்றும் இந்த வெற்றியானது காசு கொடுத்துபெற வில்லை என்றும், நாங்கள் கொள்ளையடிக்கும் கூட்டம் இல்லை என்று மக்கள் விளங்கியதன் காரணத்தால் தான் இந்த நிலையை நாங்கள் அடைந்தோம் என்றும் அவர் தெரிவித்தார். இதில் மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன், நகர செயலாளர் முஹம்மது முஹைதீன், நகர தலைவர் ரஹ்மத்துல்லாஹ்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

source from www.muthupettaiexpress.blogspot.com,

No comments:

Post a Comment