Saturday 29 October 2011

தற்கொலை செய்து கொள்பவர்களில் தமிழகம் முதலிடம்!

இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010 ம் ஆண்டில் நடந்த குற்றச்சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள இந்த அறிக்கையை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டார்.


இதன் படி இந்தியாவில் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் சராசரியாக 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.  கடந்த ஆண்டில் இந்தியா முழுவதும் 1,34,599 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் சுமார் 70.5 சதவீதம் பேர் திருமணமான ஆண்கள், 67 சதவீதம் பேர் திருமணமான பெண்கள்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 16,561 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.  2009 உடன் ஒப்பிடுகையில் 14.08 வீத அதிகரிப்பு இது. அதிலும் குறிப்பாக சென்னையில் மாத்திரம் 1,325 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் 15,916 பேரும், பெங்களூரில் 1,778 பேரும், டெல்லியில் 1,242 பேரும், மும்பையில் 1,192 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் தற்கொலை செய்து கொண்டவர்களில் 60 % முதுமை காரணமாக உயிரை மாய்த்துள்ளனர் . பெண்களை விட ஆண்கள் தான் அதாவது, 70% வீதமானோர் ஆண்களே தற்கொலை செய்து கொள்கிறார்கள், இவர்களில் 26% வீதமானோர் நன்கு படித்தவர்கள்.

28.9% வீதமானோர் மிக நெருக்கமானவர்களுக்காக தமது உயிரை மாய்த்துள்ளனர் என அந்த அறிக்கை  கூறுகிறது.

இதேவேளை, தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 64,996 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் அப்புள்ளி விபரம் கூறுகிறது.

No comments:

Post a Comment