Thursday 18 August 2011

பயங்கரவாதிகள் அணிவகுப்பு நடத்த தடை இல்லை!

கோழிக்கோடு: சுதந்திர தினத்தன்று கேரளாவில் சுதந்திரத்திற்கு அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாத கூட்டமான ஆர்.எஸ்.எஸ் தேசியக்கொடி ஏந்தி அணிவகுப்பு நடத்தியுள்ளது. அதற்கு கேரள காவல்துறையும் அனுமதி அளித்ததோடுமட்டுமல்லாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கொடுத்துள்ளது.



அலுவா பகுதியில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய அணிவகுப்பு

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரளாவில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்தி வருகிறது. மக்களிடம் சுதந்திர உணர்வை ஊட்டவும், சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறுவும் வகையில் நடத்தப்பட்டு வரும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு இந்த வருடம் கேரள உயர் நீதி மன்றம் தடை விதித்தது. அதே சமயம் தேச விரோதிகளான ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கூட்டத்தினருக்கு அணிவகுப்பு நடத்த அனுமதி அளித்து தங்களது இரட்டை நிலைபாட்டை உறுதி செய்துள்ளது கேரள அரசாங்கம்.

கேரளாவில் ஏழு மாவட்டங்களில் ஆர்.எஸ். எஸ் திவிரவாதிகள் காவல்துறையின் பாதுகாப்போடு அணிவகுப்பு நடத்தியுள்ளனர். எர்ணாகுலம் மாவட்டத்தில் அலுவா பகுதியில் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கையில் வாளுடன் அணிவகுப்பை நடத்தியுள்ளனர். மற்ற இடங்களில் கைத்தடியை கையிலேந்தி அணிவகுப்பு நடத்தினர்.
பாலக்காடு மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய அணிவகுப்பு
 தனிப்பட்ட முறையில் ஏன் உடை அணிந்து அணிவகுப்பு நடத்த வேண்டும்? சாதாரணமாக கொடியேற்றி இனிப்பு வழங்கி சுதந்திர தின கொண்டாடத்தில் ஈடுபட வேண்டியது தானே? என்ற கேள்வியே மூன்று மாநிலங்ளின் அரசாங்கம் மற்றும் காவல்துறையின் கேள்வியாக இருந்தது. அப்படியானால் அதே சுதந்திர தினத்தன்று ஏன் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கு மட்டும் ஏன் அனுமதி வழங்கவேண்டும்?

பத்தனமிதா, கொல்லம், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் வயனாடு பகுதிகளில் காவல்துறையின் பாதுகாப்போடு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.

நன்றி : harbour-popularfront.blogspot.com

No comments:

Post a Comment