Saturday, 14 May 2011

மாற்று அரசியலுக்கான உதயத்திற்கு வழிகோலும் தேர்தல் முடிவுகள்:இ.அபூபக்கர்

abubacker
புதுடெல்லி:கேரள மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் மாற்று அரசியலுக்கான புதிய விடியலை சுட்டிக்காட்டுவதாக சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். வழக்கமான முறைக்கு மாற்றமாக நுண்ணிய பெரும்பான்மையை மட்டுமே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு கேரள மக்கள் வழங்கியுள்ளனர்.
கேரளத்தை தவிர மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் ஆளுங்கட்சிக்கு எதிரான உணர்வுகளை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், வழக்கமான முறைக்கு மாற்றமான நிலைப்பாடு ஒன்றும் இத்தேர்தல்களில் பிரதிபலிக்கவில்லை. ஊழலில் மூழ்கிய ஆளுங்கட்சியை தோல்வியடைய செய்ய இக்காரியத்தில் எவ்வித வித்தியாசமும் இல்லாத எதிர்கட்சி கூட்டணியை வெற்றிப் பெறச்செய்யும் நிலைப்பாட்டைத்தான் இத்தேர்தலில் மக்கள் பின் தொடர்ந்துள்ளனர். இதற்கு காரணம் மக்களுக்கு முன்னால் வேறு வழிகள் இல்லாதது தான்.
மாற்று அரசியலின் அத்தியாவசிய தேவையை இத்தேர்தல் முடிவுகள் கட்டியங்கூறுகிறது. மேற்கு வங்காளத்தில் மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்ததன் விளைவே மம்தா பானர்ஜியின் வெற்றியாகும். எந்தவொரு கட்சியுடன் கூட்டணி சேராமல் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் சட்டமன்றத் தேர்தல்களில் தனித்தே போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் வெகுசிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
போட்டியிட்ட 101 தொகுதிகளில் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற அவர்களால் முடிந்துள்ளது. சில இடங்களில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதாக மாறியுள்ளன. சட்டமன்றத் தேர்தல்களில் முதல் பரிசோதனை என்ற நிலையில் எஸ்.டி.பி.ஐ இது அளிக்கும் தன்னம்பிக்கை சிறியதல்ல. மாற்று அரசியலுக்கான முயற்சிகளை எஸ்.டி.பி.ஐ தொடரும். இவ்வாறு இ.அபூபக்கர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment