Tuesday 17 May 2011

உஸாமா:அமெரிக்காவின் தேர்தல் பிரச்சாரம்-ஈரான்




அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற பாரக் ஒபாமா நடத்தும் பிரச்சாரம் தான் அல்காயிதா போராளி இயக்க தலைவர் உஸாமாவின் படுகொலையும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களும் என ஈரானின் அதிபர் அஹ்மத் நஜாத் கருத்து தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்காக அல்ல உஸாமாவை கொலை செய்த சம்பவம்.

அடுத்த தேர்தலிலும் மக்கள் வாக்களிப்பதற்காக மட்டுமே இச்சம்பவம். உஸாமா கொலை செய்யப்படுவதற்கு பல காலத்திற்கு முன்பே உஸாமா அமெரிக்க ராணுவத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக தனக்கு துல்லியமான தகவல் கிடைத்தது என அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் வாக்குகளை பெறவும், அமெரிக்காவின் பொருளாதாரத்தை வளப்படுத்தவும் முன்பு அந்நிய நாடுகள் மீது தாக்குதலை தொடுத்தார்.

அங்கெல்லாம் 10 லட்சம் குழந்தைகளை கொலை செய்தார். அவருடைய வழிமுறையை தொடரும் ஒபாமா செய்வதும் அதே தந்திரம் தான். அநீதியின் அதிகார மையங்களெல்லாம் தகர்ந்து கொண்டிருக்கின்றன. கைப்பாவையான ஆட்சியாளர்களை மாற்றாமல் நீதியான உலக முறை மாறாது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஒரு காலக்கட்டத்தில் தகர்ந்து போகும். அதன் மூலம் உலகில் நீதி நடைமுறைபடுத்தப்படும். இவ்வாறு அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment