Tuesday 24 May 2011

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு : சென்னை முதலிடம்!


சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் சென்னை மண்டலம் 91.32 விழுக்காடு தேர்ச்சி பெற்று, நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது.

நாடு முழுவதும் நடந்த  சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வினை மொத்தம் 6,75,658 பேர் எழுதியுள்ளனர். இதில் 5,52,091 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்கள்து விழுக்காடு 81.71 ஆகும். இது கடந்த ஆண்டைவிட  1.84 விழுக்காடு உயர்ந்துள்ளது. இந்த ஆண்ட்டும் வழக்கம்போல் மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சியடைந்துள்ளனர் (86.93விழுக்காடு).
மண்டல வாரியாக தேர்ச்சி பெற்றவர்களது விழுக்காடு விபரம் பின்வருமாறு:
சென்னை மண்டலம் : 91.32
அஜ்மீர் மண்டலம் : 85.05
பஞ்சகுலா மண்டலம் : 79.85      செய்திகள் 
டெல்லி மண்டலம் : 85.45
குவஹாத்தி மண்டலம் : 70.91
அலகாபாத் மண்டம் : 73
புவனேஸ்வர் மண்டலம் : 84.07

சென்னை மண்டலத்தில் தேர்வு எழுதிய 61,337 மாணவ, மாணவியரில் 56,012 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களில் 89.79 விழுக்காடு பேரும், மாணவிகளில் 93.21 விழுக்காடு பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை நங்கநல்லூரில் உள்ள மாடர்ன் சீனியர் செகண்டரி மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.திவ்யா 500-க்கு 492 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.சீனியர் செகண்டரி மேல்நிலைப் பள்ளி மாணவி சுமனா 491 மதிப்பெண் பெற்றுள்ளார். கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி. பள்ளி மாணவி அபிநயா 489 மதிப்பெண் பெற்றுள்ளார்.
சென்னை மாணவ, மாணவியருக்கு நேற்றே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிட்டன. வெளியூர் மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment