Wednesday, 1 June 2011
காஷ்மீர்-போலிஸ் மிரட்டலால் கல்லூரி மாணவி பலி...
ஜம்மு:ஜம்மு காஷ்மீர் தோதா மாவட்டம் புள் தோதா நகரத்தை சேர்ந்த மாணவி கடந்த திங்கட்கிழமை அன்று தன்னுடன் கல்லூரியில் பயிலும் மாணவனுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்ததற்க்காக போலிஸ் மிரட்டியதால் செனாப் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ரஷிதா பானு தன்னுடன் கல்லூரியில் பயிலும் நஜப்தினுடன் புள் தோதா நகரத்தில் செனாப் ஆற்றின் அருகில் ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்தி கொண்டிருந்தார்.
தமிழகத்தின் சிறந்த பொறியியல் / மருத்துவ கல்லூரிகள்...
தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்லூரிகள்
(தேசிய அளவிலான ரேங்க் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது)
1.Indian Institute of Technology – IIT
மெட்ராஸ் (5)
2.College of Engineering, Anna University
சென்னை (10)
3.National Institute of Technology – NIT
திருச்சி (15)
4.PSG College of Technology
கோயம்புத்தூர் (19)
பலஸ்தீனர்களின் வாழிடங்களைத் தகர்க்கும் ஆக்கிரமிப்புப் படை...
கைபேசி உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு...
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Cell Phone அல்லது Mobile Phone எனப்படும் 'கைபேசி' உபயோகிப்பவர்கள் எந்த அளவுக்கு அதன்Electromagnetic Radiation மூலம் உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதிலிருந்து தப்பிக்கும் வழி முறைகளையும் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கும் ஒரு பதிவு இது.
போராட்ட உணர்வின் நினைவிடமாக மாறிய ஷேக் யாஸீனின் வீடு
காஸ்ஸா:போராளி இயக்கமான ஹமாஸை ஊனமுற்று வயோதிக நிலையிலும் சக்கர நாற்காலியில் இருந்தபடி வழி நடத்திய ஷேக் அஹ்மத் யாஸீன் என்ற நெஞ்சுரம் மிக்க வீரரை ராக்கெட் தாக்குதலில் கொலைச் செய்தபிறகு இஸ்ரேலுக்கு ஆனந்தம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இரத்த சாட்சியாகி ஏழு வருடங்கள் கழிந்தபிறகு ஃபலஸ்தீன் மக்களுக்கு ஷேக் யாஸீன் மீதான் அன்பு கூடியுள்ளது.
காஸ்ஸா நகரத்திற்கு அருகில் உள்ள ஸப்ராவில் ஷேக் யாஸீனுடைய வீட்டில்
அஸ்ஸாம்:ரிஹாப் மறுவாழ்வு கிராமம் திறப்பு...
புதுடெல்லி:அஸ்ஸாம் மாநிலத்தில் வீடு இல்லாத ஏழை மக்களுக்காக ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் மறுவாழ்வு கிராமம் திறக்கப்பட்டது. மே மாதம் 29-ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் நஸன்குரியில் நடந்த நிகழ்ச்சியில் கிராமத்தின் திறப்பு விழா நடந்தேறியது.
டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அரசு சாரா நிறுவனம்தான் ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன். இந்த அமைப்பின் சார்பாக உள்ளூர் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் துவக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஆதரவை தேட ஹசாரே மாடல் போராட்டத்திற்கு தயாராகும் ஆர்.எஸ்.எஸ்
புதுடெல்லி: ஊழலுக்கும், கறுப்பு பணத்திற்கும் எதிரான பொது மக்களின் கோபத்தையும், உணர்வுகளையும் சாதகமாக பயன்படுத்த ஆன்மீகத்தின் பெயரால் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ள ஆர்.எஸ்.எஸின் யோகா குரு பாபா ராம் தேவ் ஹசாரே மாடல் போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்.
ஊழலுக்கு எதிராகவும், இந்தியர்களின் கறுப்பப்பணத்தை திரும்ப கொண்டுவரவும் வருகிற ஜூன் 4-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக பாபா ராம் தேவ் அறிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க்பரிவார பயங்கரவாத அமைப்புகளின் தீவிர ஆதரவுடன் இந்த போராட்டம் நடைபெறவிருக்கிறது.
முஸ்லிம் உம்மாஹ்வின் எதிரியாக தொடர்ந்தும் மேற்கு அரச இயந்திரங்கள்...
அல் குத்ஸ் மஸ்ஜித் அமைந்துள்ள கிழக்கு ஜெருசலம் படிப்படியாக யூத குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது
முத்துப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு நியமனம்...
சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள
பொதுமக்கள் எந்த நேரத்திலும் அழைக்கலாம்
புதியதாக பொறுப்பு ஏற்ற முத்துப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பேட்டி
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கந்தசாமி சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு வேறு ஊருக்கு சென்றுவிட்டதால் புதியதாக முத்துப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டாக கோ.கோபி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
2ஜி விவகாரம் - சன் டி.வி. 700 கோடி ரூபாய் ஊழல்!!
அது குற்றமென்றால் இது என்ன? எனக் கேள்வி எழுப்புகிறது ஆங்கில புலனாய்வு இதழான தெஹல்கா.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் திகார் சிறையில் உள்ள ஆ.ராசா மீது சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை,
2001ஆம் ஆண்டுக்கான விலையிலேயே அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது என்பதும்,
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதும்தான்.
Tuesday, 31 May 2011
பெற்றோரின் கவனக்குறைவால் 3 வயது சிறுவன் பூட்டிய காருக்குள் மரணம்!
சென்னை பல்லாவரம் புறநகர் பகுதியில் வசிக்கும் நியாமதுல்லா (37) மற்றும் அவரது மனைவி மும்தாஜ் பேகம் (36) உறவினரின் மரணத்தையொட்டி துக்கம் விசாரிக்க திருவிக நகருக்கு தங்கள் மூன்று வயது மகன் அஸ்மதுல்லாவுடன் சென்றுள்ளனர்.
பகல் 1:00 மணியளவில் உறவினரின் வீட்டுக்குச்சென்ற அவர்கள், மகன் காரில் உறங்கியதைக் கவனிக்காமல் கணவருடன் சென்றிருக்கூடும் என்று மனைவியும், மனைவியுடன் இருக்கக்கூடும் என்று கணவரும் நினைத்துக் கொண்டு இருந்துள்ளனர்.
துக்கவீட்டில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருவரும் மூன்றுமணி நேரம் கழித்தே சந்தித்துள்ளனர். அப்போது குழந்தை எங்கே என்று ஒருவரை ஒருவர் விசாரிக்கும்போதுதான் பின்சீட்டின் உறங்கியதை உணர்ந்து பதறியபடி காரை நோக்கிச்சென்றுள்ளனர்.
துக்கவீட்டில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருவரும் மூன்றுமணி நேரம் கழித்தே சந்தித்துள்ளனர். அப்போது குழந்தை எங்கே என்று ஒருவரை ஒருவர் விசாரிக்கும்போதுதான் பின்சீட்டின் உறங்கியதை உணர்ந்து பதறியபடி காரை நோக்கிச்சென்றுள்ளனர்.
சிறுமியை கற்பழித்த இருவருவருக்கு நடுத்தெருவில் தூக்குதண்டனை!
ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான மற்றும் விபச்சார வழக்கிற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். சில மாதங்களுக்கு முன் 9 வயது சிறுமியை கற்பழித்து அதை வீடியோ எடுத்த வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேற்று தெருவில் மக்கள் முன்னிலையில் வைத்து தூக்கு நிறைவேற்றப்பட்டது. காவல்துறை வாகனத்தின் மேல் இருவரையும் நிற்க வைத்து பின் தூக்கில் தொங்கவிட்டு பின் வாகனம் நகற்றப்பட்டது. பின் உயிர் பிரிந்தப்பின் இருவது உடலையும் சிறுது நேரம் தொங்கவிடப்பட்டு பின் காவல்துறையினர் உடலை கொண்டு சென்றனர். இதை ஆயிரகணக்கான மக்கள் பார்த்தனர்.
இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள்!
உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து 1987 ம் ஆண்டு மே மாதம் 31 ஆம் நாளை சிறப்பு நாளாக அறிவித்தது.
உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.
உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.
பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் இரண்டாவது இடம் பிடித்தவர்க்கு பாப்புலர் ப்ரண்ட் பாராட்டு...
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மேலப்பாளைய மாணவன் சதாம் உசேன் மாநில அளவில் 495 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேலும் மாவட்ட அளவில் முதலும் பிடிதுள்ளார்.நெல்லை மாவட்ட பாப்புலர் ப்ரண்ட் சார்பாக இவரை பாராட்டிகேடயமும் பரிசும் வழங்கியது .இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, நகர தலைவர் மூஸல் காலிம் .நகர செயல்குழு உறுப்பினர் பால் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டு அந்த மாணவனை வாழ்த்தினர்.
பள்ளி செல்வோம் விழிப்புணர்வு பேரணி...
இந்த இரு மாதங்களுக்கு நாடு முழுவதும் கல்வி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள்,
அல் குத்ஸ் ஆக்கிரமிக்கப்பட்டு 44 ஆண்டுகள்...
Know Islam இஸ்லாத்தை அறிந்து கொள்வோம் : தென்காசி கருத்தரங்கம்
இஸ்லாத்தை அறிந்து கொள்வோம் எங்கின்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் தென்காசியில் மே 29 அன்று விடிஎஸ்ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது. சுமார் 500 பேருக்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று பயனடைந்துள்ளனர்.
நம்மை சீரமைப்போம் என்கிற தலைப்பில் ஜாஃபர் அலி உஸ்மானி அவர்கள் தனி மனித ஒழுக்கத்தின் அவசியம் குறித்தும் அவை செம்மையாக சீராக பேணப்படாமல் விட்டுவிடப்பட்டால் சீரழிந்து போய்விடும் என்பதை தக்க உதாரணத்துடன் விளக்கினார். ஒரு விவசாய நிலம் முறையாக உழுது களையெடுக்கப்பட்டு நீர் பாசனத்தை சரியான தருணத்தில் பாய்ச்சி கண்ணும் கருத்துமாக உரமிட்டு பயிரிட்டு அருவடை செய்தால் தான் அந்த விவசாயிக்கு எதிர்பார்த்த பலனைத்தரும் அதே போல குழந்தைகளையும் சீரும் சிறப்புமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தொடர வேண்டும் இதுபோன்ற பேச்சுவார்த்தைகள்!
May 31, சில நாட்களுக்கு முன் பங்களாதேசில் நடந்த கிரிகெட் போட்டியில்,
இந்திய பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பின் நல்ல தொடக்கமாக,
இன்று இரு நாட்டின் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
மாவீரன் கர்கரே உடைய மரணத்திருக்கு முன் இதுபோல் பேச்சுவார்தைகள் நடக்கும்போதெல்லாம் இந்தியாவில் எங்காவது குண்டுவெடிப்புகள் நடக்கும்.
இந்திய பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பின் நல்ல தொடக்கமாக,
இன்று இரு நாட்டின் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
மாவீரன் கர்கரே உடைய மரணத்திருக்கு முன் இதுபோல் பேச்சுவார்தைகள் நடக்கும்போதெல்லாம் இந்தியாவில் எங்காவது குண்டுவெடிப்புகள் நடக்கும்.
Monday, 30 May 2011
யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்...
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்
யுவான் ரிட்லி (Yvonne Ridley), நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்த பெயர். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். பத்திரிக்கையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல பரிமாணங்களை கொண்டவர்.
இவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி சுருக்கமாக...
அது செப்டம்பர் 2001 ன் பிற்பகுதி, சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் பிரிட்டனின் சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காக பணியாற்றிய நேரம். உலகம், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்களால் ஸ்தம்பித்திருந்த நேரம். அமெரிக்காவின் சந்தேகக் கண்கள் அப்கானிஸ்தான் மீதும், அதனை ஆளும் தாலிபான்களின் மீதும் வலுவாக விழுந்திருந்த சமயம்.
மரியம் பிச்சை மரணத்திற்கு காரணமான லாரி டிரைவர் பிடிபட்டார்...
அமைச்சர் மரியம் பிச்சை மரணத்திற்கு காரணமான லாரி பிடிபட்டது. லாரி டிரைவரும் பிடிபட்டான். லாரி உரிமையாளரையும் கைது செய்து விசாரணை செய்ய போலீஸ் முடிவு செய்துள்ளது.
சென்னையில் எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழாவிற்காக அமைச்சர் மரியம்பிச்சை, திருச்சியில் இருந்து காரில் கடந்த 23ம் தேதி சென்றபோது, பாடாலூர் அருகே காரும், லாரியும் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் அமைச்சர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் மர்மம் இருப்பதால், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் முஸ்லிம் பெண் !!!
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்கள் எல்லோரும் மேற்கத்திய நாடுகளையும் , ஜப்பான், சீனாவையும் சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். முதல் முறையாக பாலஸ்தீனத்தை சேர்ந்த பெண் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தது இருக்கிறார். இந்த சாதனையை நிகழ்த்திய முதல் முஸ்லிம் பெண் இவர் ஆவார்.
இவர் பெயர் சுசானே அல் கூபி. 44 வயதான இவர் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் என்றபோதிலும் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.
இவர் முதன் முதலில் தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சரோ சிகரத்தில் ஏறி, இந்த சிகரத்தில் ஏறிய முதல் அரேபிய பெண் என்ற பெருமை பெற்றார். பிறகு பிரான்சில் உள்ள பிளாங் மலைச் சிகரம், ரஷியாவில் உள்ள எல்புரூஸ் சிகரம் ஆகியவற்றில் ஏறி சாதனை படைத்தார். இப்போது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தது இருக்கிறார்.
துபாயில் உள்ள போன் அண்ட் ஜாயிண்ட் மையத்தில் துணை தலைவராக பார்த்து வந்த வேலையை மலை ஏறுவதற்காக ராஜினாமா செய்தார். உலகத்தில் முஸ்லிம் பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டுவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன் என்று கூறுகிறார்.
மோடி ஆட்சியில் "குஜராத்தில்" கடும் குடிநீர் பஞ்சம்!!
குஜராத்தில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.
தலைநகர் அகமதாபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பொது குழாயில் குடிநீருக்காக பெண்கள் இப்படி காத்துக்கிடக்கின்றனர்.
மக்கள் உயிர் வாழ அடிப்படை தேவையான தண்ணீர் வசதியை ஒழுங்கு செய்து கொடுக்க முடியாதவன்தான் இனப்படுகொலை பயங்கரவாதி மோடி.
இவர்தான் இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராம், இந்த மாநிலம்தான் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாம்,
ஷார்ஜாவில் வெகு சிறப்பாக நடைபெற்ற “ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்"
எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) ஏற்பாடு செய்திருந்த “ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்” என்ற குடும்ப நிகழ்ச்சி 22.04.11 வெள்ளியன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ஷார்ஜாவிலுள்ள ரையான் ஸ்டார் இண்டர்நேஷனல் ஸ்கூலில் நடைபெற்ற இந்த இனிய மாலை நிகழ்ச்சியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்குபெற்று பயனடைந்தனர். முன்னதாக, திருமறை வசனங்களை ஓதி சகோ. அப்துல் கஃபூர் அவர்கள் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பின்னர் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். E.I.F.F.-ன் பணிகள் குறித்த அறிமுகவுரையை அதன் பொருளாளர் சகோ. அஷ்ரஃப் அலீ அவர்கள் நிகழ்த்தினார்.
ஊழல் புரியும் உயர் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்டம்?
புதுடெல்லி:ஊழல் புரியும் உயர் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடும் தண்டனை வழங்க லோக்பால் மசோதா வரைவில் வழிவகைச்செய்யப்படும் என கருதப்படுகிறது.
டெல்லியில் இன்று(திங்கள்கிழமை) கூடும் லோக்பால் வரைவுக் குழு கூட்டத்தில் இந்தக் கருத்து வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.
ஊழல் புரியும் அதிகாரிகளுக்கு குறைந்தது ஒருவருடமாவது தண்டனை வழங்க வழி வகைச்செய்யப்படும் என லோக்பால் மசோதா வரைவு குழுவில் இடம்பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ஊழல் குற்றம் சாட்டப்படும் நபரின் பதவி உயர்வதுக்கு ஒப்ப தண்டனையும் கடுமையும் அதிகரிக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என அன்னா ஹஸாரேயின் தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
எகிப்து-ஈரான் இடையே உறவில் முன்னேற்றம்:மேற்குலகம் அஞ்சுகிறது-ஈரான்
டெஹ்ரான்:எகிப்தின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு பிறகு எகிப்து-ஈரான் இடையே வளர்ந்து வரும் உறவு மேற்குலகம்,அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளதாக ஈரானின் பாராளுமன்ற விவகார துறையின் துணை தலைவரான முஹம்மது ரிஸா மிர் தஜ்ஜெத்தினி தெரிவித்துள்ளார்.
எகிப்து – ஈரான் இடையே உறவு பலப்படுவது பிராந்தியத்தின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுக்குறித்து மேற்கு உலகிற்கு நன்றாக தெரியும். ஆதலால் டெஹ்ரான் – கெய்ரோ இடையேயான உறவை முறிக்க அவர்கள் என்ன விலையையும் கொடுக்க தயாராக இருப்பார்கள் என முஹம்மது ரிஸா IRNA செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகிறார். சமீபத்தில் எகிப்தின் மத – கலாச்சார துறைகளைச்சார்ந்த பிரபலமானவர்கள் ஈரானுக்கு வருகை தந்து சந்திப்பு நடத்தியதை முஹம்மது ரிஸா சுட்டிக்காட்டுகிறார்.
எகிப்து – ஈரான் இடையே உறவு பலப்படுவது பிராந்தியத்தின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுக்குறித்து மேற்கு உலகிற்கு நன்றாக தெரியும். ஆதலால் டெஹ்ரான் – கெய்ரோ இடையேயான உறவை முறிக்க அவர்கள் என்ன விலையையும் கொடுக்க தயாராக இருப்பார்கள் என முஹம்மது ரிஸா IRNA செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகிறார். சமீபத்தில் எகிப்தின் மத – கலாச்சார துறைகளைச்சார்ந்த பிரபலமானவர்கள் ஈரானுக்கு வருகை தந்து சந்திப்பு நடத்தியதை முஹம்மது ரிஸா சுட்டிக்காட்டுகிறார்.
புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் ஊழலா?
சென்னை : முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான, புதிய அரசின் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் இன்று கோட்டையில் நடக்கிறது.இக்கூட்டத்தில் இலவச அரிசி திட்டம், திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு இலவச தங்கம் உள்ளிட்ட திட்டங்களை மக்களுக்கு சேரும் வகையில் அமல்படுத்துவது குறித்து அமைச்சர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படும்.
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வான மாணவ, மாணவியருக்கு லேப்-டாப் வழங்குதல், தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயம் தொடர்பான பிரச்னை, கவர்னர் உரையில் இடம் பெறும் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.
எத்தனை காலம்தான் "ஏமாற்றுவார்" இந்த நாட்டிலே!!
சத்தீஷ்கார் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெறுகிறது.அந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.5-க்கு 1 கிலோ பருப்பு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
அந்த தொடக்க விழாவில் பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி கலந்து கொண்டு திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.
அந்த விழாவில் பேசிய நிதின் கட்காரி, உலக அளவில் தீவிரவாதம் வளர்ந்து வருவதால் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று தெரிவித்தார்.
Sunday, 29 May 2011
வகுப்பு கலவரங்களை தடுக்க ஆணையம்
புதுடெல்லி:வகுப்பு கலவரங்களை தடுக்கவும், சமூகத்தில் நல்லிணக்கத்தை உருவாக்கவும் மத்திய, மாநிலங்கள் அளவில் ஆணையம் உருவாக்கப்படவேண்டும் என மத்திய அரசு நிறைவேற்றவிருக்கும் கலவர தடுப்பு மசோதா கூறுகிறது.
மத்திய அரசுடன் கலந்தாலோசித்து வகுப்பு கலவரங்களை தடுக்க அளவுகோல்களை வெளியிடவும், மறுவாழ்வு திட்டங்களை தயாராக்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படும் என வரைவு மசோதா தெரிவிக்கிறது.
சேர்மன், துணை சேர்மன் தவிர ஐந்து உறுப்பினர்களை கொண்ட ஆணையத்தில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவராக இருக்கவேண்டும் எனவும், மீதம் 4 பேர் பெண்கள் எனவும் மசோதா கூறுகிறது. ஆணையத்தின் உறுப்பினர்கள் மீது எவ்வித வழக்குகளும் இருக்க கூடாது.
Saturday, 28 May 2011
காஸா ரஃபா எல்லையை முழுமையாகத் திறந்தது எகிப்து! (வீடியோ இணைப்பு)
உலகின் மிகப்பெரும் சிறைச்சாலை என்று வர்ணிக்கப்பட்ட காஸா பகுதியில் இருந்து மக்கள் மருத்துவத்திற்காகக் கூட வெளியே செல்ல முடியாத வகையில் இஸ்ரேலும் எகிப்தும் தடைகளை ஏற்படுத்தி வைத்திருந்தது.
2007ஆம் ஆண்டு காஸா பகுதியின் ஆட்சி நிர்வாகம் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் கீழ் வந்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் இந்தத் தடையை ஏற்படுத்தியிருந்தது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வேண்டுகோளைத் தொடர்ந்து, மக்கள் புரட்சியின் மூலம் ஆட்சியை விட்டு விரட்டப்பட்ட ஹோஸ்னி முபாரக் எகிப்து அதிபராக இருந்த போது, காஸாவில் இருந்து எகிப்து செல்லும் ரஃபா எல்லைக் கதவை முழுமையாக அடைத்தது.
ஒரு கிளாஸ் மதுவுடன் உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வு :ஒபாமா
உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் பல வருடங்களாக நீடிக்கும் பயங்கரவாதத்திற்கான போர் என்பவற்றைத் தொடர்ந்து இரு நாடுகளும் முன்னெப்போதுமில்லாத முக்கிய தருணத்தை வந்தடைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார். அதேவேளை பிரிட்டன் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பு பிரிட்டன் பாராளுமன்றது முன்பாக ஒபாமா, கெமரூன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது விரிவாக
இலக்கை அடைவதற்கான வழிமுறைகள்...
1- ஆசை, ஆர்வம்
2- தன்னம்பிக்கை
3- இலக்கின் மூலம் பெற்றுக்கொண்ட இலட்சியங்களை அறிந்து அதனை எழுதிக்கொள்ளல்.
4- இலக்கின் மூலம் பெற்றுக்கொண்ட பிரயோசனங் களையும் எழுதிக்கொள் ளல்.
5- அந்த இலக்கு உனக்குப் பெற்றுத்தரப்போகும் தரத்தை அறிந்திருத்தல். (சுவனமா, நரகமா?)
பெண்ணே ! உனக்காய் சில வரிகள்...
- உன் உள்ளத்தின் வலிகள்தான் நாளைய சுவனத்தில் சுபசோபனமாகும்.
- உன் விழிகள் அவனுக்காய் மட்டும் கண்ணீர் சிந்துகிறது என்றால், நீயும் நாளைய பொழுதில் அர்ஷின் நிழலைப் பெற்ற அதிஷ்டசாலிதான்.
- அல்லாஹ்வுக்காக என்று நீ ஆசை வைத்துப்பார்,அவன் ஒருபோதும் உன்னை கைவிடாமல் உன் ஆசைகளை சுவனத்தில் நிலைத்திடச் செய்வான்.
- உன்னில் இப்போதெல்லாம் மறுமையை இலக்காய் கொண்ட சந்தோஷம் வாழுமென்றால்... நீ உண்மையில் இறைநேசமுள்ளவள்தான்.
அப்சல் குருவும், ஹிந்துதுவாவும்! ஒரு பார்வை!!
2001, டிசம்பர் 13-ம் தேதி, நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பாதுகாப்பு வீரர்களும், நாடாளுமன்றத்தின் ஒரு அலுவலரும் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதல் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான அப்சல் குருவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
லிபியா:எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கு கத்தாஃபி தயார்
திரிபோலி:லிபியாவில் போரை நிறுத்திவிட்டு எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அந்நாட்டு அதிபர் முஅம்மர் கத்தாஃபி அறிவித்துள்ளார். இதனால் சில மாதங்களாக தொடரும் போராட்டம் முடிவுக்கு வரும் என கருதப்படுகிறது. ஆனால், 40 வருடங்களுக்கு மேலாக பதவியில் தொடரும் கத்தாஃபி ராஜினாமா செய்ய சாத்தியமில்லை.
ஐரோப்பியன் யூனியன், ஐ.நா சபை உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கத்தாஃபியிடம் ராஜினாமா செய்ய கோரிக்கை விடுத்திருந்தனர்.
சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டுவந்தது ஏன்? கலைஞர் விளக்கம்
கல்வியிலும் சமத்துவம் நிலைநாட்டவேண்டும் என்பதற்காகத்தான் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் விளக்கம் அளித்துள்ளார்.
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கலைஞர் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2006 ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழி அமைப்போம் என்று தி.மு.க. அறிவித்திருந்தது. சமச்சீர் பள்ளிக்கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறை சட்டம் 2010 ம் ஆண்டு இயற்றப்பட்டு; சமச்சீர் கல்வி முறை 2010 11 ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 மற்றும் 6 ம் வகுப்புகளில் நடைமுறை படுத்தப்பட்டதுடன் புதிய பாட நூல்களும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கலைஞர் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2006 ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழி அமைப்போம் என்று தி.மு.க. அறிவித்திருந்தது. சமச்சீர் பள்ளிக்கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறை சட்டம் 2010 ம் ஆண்டு இயற்றப்பட்டு; சமச்சீர் கல்வி முறை 2010 11 ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 மற்றும் 6 ம் வகுப்புகளில் நடைமுறை படுத்தப்பட்டதுடன் புதிய பாட நூல்களும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.
போலி விமானி லைசன்ஸ்:பா.ஜ.க முன்னாள் அமைச்சரின் மகன் சிக்கினார்
ஜெய்ப்பூர்:இந்தியாவில் எந்த முறைகேடு நடந்தாலும் அதில் பா.ஜ.கவின் பங்கு இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் போலி விமானி லைசன்ஸ் (உரிமம்) வழக்கில் பா.ஜ.கவின் முன்னாள் அமைச்சரின் மகனும் சிக்கியுள்ளார்.
தொடரும் பாசிச சேவை:பாண்டே கடமை தவறவில்லை-எஸ்.ஐ.டியின் நற்சான்றிதழ்
அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை குறித்து விசாரணையை நடத்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) முன்னாள் குஜராத் மாநில டி.ஜி.பி பி.சி.பாண்டேவுக்கு நற்சான்றிதழ்(clean chit) வழங்கியுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் உருவான விதம்
நம் இந்திய நாட்டில் ஏற்பட்டு வரும் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம், வறுமையை போக்கவும், பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேற்றவும் தவறி வருகிறது.
நம் நாடு சுதந்தரிமடைந்த பிறகு பெரும் வியாபார முதலீட்டாளர்கள் மூலம் பெரும் வளர்ச்சியடைந்தாலும் சாதாரண மக்களின் அடிப்படை தேவைகள் கூட மறுக்கப்பட்டு வருகிறது.
பரம்பரை பரம்பரையாக இந்த நாட்டை ஆட்சி செய்து வரும் அரசாங்கங்களோ ஜனநாயகம் என்று அழைக்கப்படக்கூடிய "மக்களாட்சி" தத்துவத்தை சீர்குலைத்து சர்வதிகாரம் போன்று செயல்பட்டு வருகின்றனர். காலணி ஆதிக்க சக்திகளுடனும், ஃபாஸிச சக்திகளுடனும் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றனர்.
நம் நாடு சுதந்தரிமடைந்த பிறகு பெரும் வியாபார முதலீட்டாளர்கள் மூலம் பெரும் வளர்ச்சியடைந்தாலும் சாதாரண மக்களின் அடிப்படை தேவைகள் கூட மறுக்கப்பட்டு வருகிறது.
பரம்பரை பரம்பரையாக இந்த நாட்டை ஆட்சி செய்து வரும் அரசாங்கங்களோ ஜனநாயகம் என்று அழைக்கப்படக்கூடிய "மக்களாட்சி" தத்துவத்தை சீர்குலைத்து சர்வதிகாரம் போன்று செயல்பட்டு வருகின்றனர். காலணி ஆதிக்க சக்திகளுடனும், ஃபாஸிச சக்திகளுடனும் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றனர்.
Friday, 27 May 2011
மூடி மறைப்பேன் என்னை !
திரையிட்டு வந்தேன்;
உன் இச்சைக்கொண்ட
பார்வைக்கு எச்சில் துப்பி
எதிர்ப்பேன்!
அரைநிர்வாணம்
அழகாய் தோன்றும் உனக்கு;
உன் அக்காள் தங்கை
காட்டி வந்தாள் முழுக்கோபம் எதற்கு!
மாற்றான் தோட்டத்து
மல்லிகை மட்டும்
மணக்கவேண்டும் உனக்கு;
மானங்கெட்ட மானிடனே
மனைவியை
பூட்டிவைக்கிறாய் எதற்கு!
போர்த்தியிருக்கும் எங்களை
கழட்டச் சொல்லி கேட்கிறாய்;
கழட்டி வந்த பெண்களிடம்
கைவரிசையைக் காட்டுகிறாய்!
மானம் காக்க
மறைத்திருப்பது
சிறையென்று நீ நினைத்தால்;
ஒத்துக்கொள்கிறேன்
ஒளிந்திருக்கிறேன்
உனக்காகத்தான்;
தப்பிப்பதற்கு!
நன்றி: harbour-popularfront.blogspot.com
ஊனம் ஒருதடையல்ல...
வாழ்க்கையில் சாதிப்பதகு ஊனம் ஒரு தடையல்ல என்பதினை நிரூபிக்கும் பல விதமான மனிதர்களை பற்றி நாம் கேள்விபட்டுள்ளோம். அத்தகைய ஓர் சிறுவனைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தியே இது.
அமெரிக்காவைச் சேர்ந்த 9 வயதான கோடி மெக்கஸ் லேண்ட் என்ற அச் சிறுவனிடம் சுமார் 20 செயற்கைக் கால்கள் உள்ளன.
இவை அனைத்தும் வெவ்வேறு விதமான போட்டிகளில் பங்கு பற்றுவதற்காக அச்சிறுவன் தன்னிடம் வைத்துள்ள வையாகும்.
இதுவரை பல விளையாட்டுக்களில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளான் கோடி.
இவன் குழந்தையாக இருக்கும் போதே இவனது கால்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன.
எனினும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காத கோடி தனது முயற்சி மூலம் தன்னால் பல விளையாட்டுக்களில் சாதிக்கமுடியும் என்பதினை நிரூபித்துள் ளனா.
இவனது வெற்றிகளுக்கான இன்னுமோர் முக்கிய காரணம் இவனது பெற்றோ ராகும். அவர்களது ஊக்குவிப்பே இத்தகைய ஓர் தன்னம்பிக்கை மிக்க ஒரு வனாக மாற வழிவகுத்துள்ளது.
கோடியின் தற்போதைய இலக்கு உலக ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் ஓர் தங்கப் பதக்கத்தை வெல்வதே ஆகும்.
10ம் வகுப்பு: முதல் 3 இடங்களை பிடித்த 40 மாணவ மாணவிகளின் பெயர் மற்றும் பள்ளி விபரம்
10ம் வகுப்பு தேர்வில் 5 மாணவிகள் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.. இவர்கள் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர். 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2வது இடத்தை 11 பேர் பிடித்துள்ளனர். 500க்கு 494 மார்க்குகள் பெற்று 24 பேர் மாநிலத்தில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
500 க்கு 496 மதிப்பெண்கள் பெற்ற 5 மாணவிகள் விவரம் வருமாறு:
1. எம்.நித்யா, எஸ்.எச். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிப்புத்தூர்.
2. எஸ். ரம்யா, ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபி செட்டிப்பாளையம்.
3. எஸ்.சங்கீதா, முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, பெரியயேரி, சேலம்.
4. எம்.மின்னலாதேவி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.
5. ஆர்.ஹரிணி (496), அவர்லேடி மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர், சென்னை.
2. எஸ். ரம்யா, ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபி செட்டிப்பாளையம்.
3. எஸ்.சங்கீதா, முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, பெரியயேரி, சேலம்.
4. எம்.மின்னலாதேவி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.
5. ஆர்.ஹரிணி (496), அவர்லேடி மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர், சென்னை.
10ம் வகுப்பு தேர்வு: 5 பேர் முதல் இடம்...
10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னல் விழி உட்பட 5 மாணவ, மாணவிகள் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.. இவர்கள் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 28ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவிகள் 2 ஆயிரத்து 800 மையங்களில் எழுதினார்கள். இவர்களில் 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 பேர் பள்ளிக்கூட மாணவ மாணவிகள். அதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர் மாணவிகள்.
பாப்ரி மஸ்ஜித்:உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ 19 வருடங்களுக்கு பிறகு கைது ..
பாட்னா:பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படும் வேளையில் உணர்ச்சியை தூண்டும் வகையில் உரை நிகழ்த்திய அவுரங்காபாத்தை சார்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ராமாதர் சிங் 19 வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றம் இவரை 14 தினங்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.
1995-ஆம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் ராமாதர் சிங். அவுரங்காபாத் நீதிமன்றம் இவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருந்தது. பீகார் மாநிலத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த இவர் கடந்தவாரம் பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா செய்த உடனேயே பாட்னா உயர் நீதிமன்றம் ராமாதர் சிங்கிடம் கீழ் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது. பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமாரின் ஆட்சியின் நற்பெயரை கெடுக்க கூடாது என்பதால் பதவியை ராஜினாமா செய்வதாக ராமாதர் சிங் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
1992-ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வேளையில் முஸ்லிம்களுக்கு எதிராக வகுப்பு வாத துவேசத்தை உருவாக்கும் வகையில் உரை நிகழ்த்தியதாக ராமாதர் சிங் மீது வழக்கு தொடரப்பட்டது.
அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக ஈராக்கில் பிரம்மாண்ட கண்டன பேரணி
பாக்தாத்:அமெரிக்க ராணுவத்தை நீண்டகாலம் ஈராக்கில் நிறுத்தி வைப்பதற்கான முயற்சி தொடரும் வேளையில் அமெரிக்க ராணுவம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கோரி பாக்தாதில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. ஸதர் நகரத்தில் 20 ஆயிரம் பேர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். 2011 ஆம் ஆண்டு ராணுவம் வாபஸ் பெறப்படும் என அமெரிக்கா ஏற்கனவே அறிவித்த பொழுதிலும் ஈராக் ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கிறோம் என்ற பெயரில் தற்போதும் ஈராக்கில் தொடர்கிறது.
ஷியா முஸ்லிம் தலைவர் முக்ததா அல் ஸதர் இப்பேரணிக்கு தலைமை வகித்தார். 2011 டிசம்பர் மாதம் அமெரிக்க ராணுவம் நாட்டை விட்டு வெளியேறும் என்பது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருநாடுகளிடையே ஒப்பந்தம் உருவானது. ஒப்பந்தத்தை பேண பிரதமர் நூரி அல் மாலிக்கி தயாராக வேண்டும் என ஸதர் கோரிக்கை விடுத்தார்.
பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி அமெரிக்கா தலைமயிலான கூட்டணி நாடுகள் ஈராக்கை ஆக்கிரமித்து துவசம் செய்தன. தொடர்ந்து ஈராக் அதிபர் சதாம் ஹுசைனை கைது செய்து விசாரணை நடத்தி கொலை செய்தனர். ஆனால், அமெரிக்காவால் எவ்வித பேரழிவு ஆயுதங்களையும் ஈராக்கில் கண்டுபிடிக்க முடியவில்லை
SDPi வெறும் அரசியல் கட்சியல்ல, ஒரு மிஷன்: இ அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய தலைமையுரை
பெங்களூரு: புதிதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய தலைவர் இ அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய தலைமையுரை:
பெரியோர்களே சகோதர சகோதரிகளே, நாம் மற்றொரு சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு சாட்சியாளராக இங்கு குழுமி இருக்கிறோம்.
ஜூன் 21, 2009 அன்று கரோல் பாக்கிலுள்ள ஹோட்டலின் அரங்கில் 29 பேர் முன்னிலையில் கட்சி தோற்றுவித்ததற்கான அறிவிப்பை வெளியிட்ட அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நான் நினைவுகூர்கிறேன். அப்போது தற்காலிக குழு அமைக்கப்பட்டது, இது தேர்ந்தெடுக்கப்படவில்லையெறாலும் அது பல்வேறு இந்திய மாநிலத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறத்தக்கவகையில் பிரதிநிதிகளைக்கொண்டு அமைக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.
பெரியோர்களே சகோதர சகோதரிகளே, நாம் மற்றொரு சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு சாட்சியாளராக இங்கு குழுமி இருக்கிறோம்.
ஜூன் 21, 2009 அன்று கரோல் பாக்கிலுள்ள ஹோட்டலின் அரங்கில் 29 பேர் முன்னிலையில் கட்சி தோற்றுவித்ததற்கான அறிவிப்பை வெளியிட்ட அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நான் நினைவுகூர்கிறேன். அப்போது தற்காலிக குழு அமைக்கப்பட்டது, இது தேர்ந்தெடுக்கப்படவில்லையெறாலும் அது பல்வேறு இந்திய மாநிலத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறத்தக்கவகையில் பிரதிநிதிகளைக்கொண்டு அமைக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.
நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்!!
மே 27, புதிதாக ஆட்சியில் அமர்ந்த உடன் ஜெயலலிதா ஒரு அறிவிப்பை செய்தார்.அது என்ன வென்றால் இனி மக்கள் அஞ்சாமல் நிம்மதியாக வாழலாம் என்று!
அவர் அப்படி சொல்லி ஒரு நாள் கூட, முடியவில்லை சிறுபான்மை சமூக அதிமுக மத்திய அமைச்சர் மரியம் பிச்சை விபத்தின் மூலம் கொல்லப்பட்டார்.
அது சம்மந்தமாக இதுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. விபத்து நடத்திய லாரி கூட இதுவரை கண்டுப்பிடிக்க படவில்லை.
Subscribe to:
Posts (Atom)
















