நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன.
Home
- முகப்பு
- செய்திகள்
- உலகம்
- இயக்க செய்திகள்
- கட்டுரை
- முத்துப்பேட்டை
- கல்வி
- மருத்துவம்
- இஸ்லாம்
- வரலாறு
- சட்டம்
- பயனுறு தகவல்
- பெண்கள் பகுதி
- கவிதை
- தேடல்
Showing posts with label இயக்க செய்திகள். Show all posts
Showing posts with label இயக்க செய்திகள். Show all posts
Friday, 24 January 2014
Thursday, 14 November 2013
Wednesday, 16 October 2013
“அச்சமற்ற அரசியல்” உருவாக களம் அமைப்போம் ! பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் அவர்களின் தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி!
இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து தனது அருமை மகனையே அறுத்துப் பலியிடத் துணிந்த இப்ராஹீம் நபி அவர்களின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக உலக முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். இந்த தியாக உணர்வும் இறை அச்சமும் நம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.
Saturday, 5 October 2013
சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தெருமுனை பிரச்சாரம்!
"அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்" என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடத்திவருகிறது. தொடர் பிரச்சாரத்தின் நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெற இருக்கிறது.
Saturday, 28 September 2013
கூத்தாநல்லூர் நகர பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் நகர அலுவலகம் திறப்பு விழா!
முஸ்லிம் சமூகத்தை வலிமைபடுத்துவதற்காக தேசிய அளவில் செயல்பட்டு கொண்டிருக்கும் மக்கள் பேரியக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் புதிய நகர அலுவலகம் கூத்தாநல்லூர்-ல் 27-09-2013 இன்று சிறப்பாக திறக்கப்பட்டது.
Thursday, 19 September 2013
முத்துப்பேட்டையில் நாளை அனைத்து ஜும்மா பள்ளிவாசலிலும் முஸாஃபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி வசூல் செய்யப்படுகிறது!
கண்ணியத்திற்குரிய ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உத்திரப்பிரதேசம் மாநிலம் முஸாஃபர் நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கி நடைபெற்ற கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 70,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Tuesday, 17 September 2013
"புனையப்பட்ட வழக்குகள், புதைக்கப்ட்ட வாழ்வுகள்" : கோவையில் நடந்த புத்தக வெளியீடு
கோவை : "அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்" என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை நடத்த இருக்கும் தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கோவையில் நடந்த துவக்க பொதுக்கூட்டத்தில் "புனையப்ட்ட வழக்குகள், புதைக்கப்ட்ட வாழ்வுகள்" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? கோவையில் எழுச்சியுடன் நடைபெற்ற துவக்க பொதுக்கூட்டம்!
கோவை : "அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்" என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடைபெறுகிறது. தொடர் பிரச்சாரத்தின் துவக்க தினமான செப்டம்பர் 15 அன்று கோவையில் மாபெரும் துவக்க பொதுக்கூட்டமும், நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெறும்.
Friday, 6 September 2013
முத்துப்பேட்டை: தொடரும் காவல்துறையின் முஸ்லிம் விரோதபோக்கு! அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து கைது செய்ய முயற்சி முறியடிப்பு!
சமீப காலமாக வீண் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துவது முத்துப்பேட்டை காவல் துறையின் நோக்கமாகவுள்ளது. அந்தவகையில் நேற்று இரவு எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில், முன்னாள் எஸ்.ஐ. பால்ராஜ் உட்பட காவல் துறையினர் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அ. அபூபக்கர் சித்திக் அவர்களின் வீட்டில் அத்துமீறி நுழைந்து கைது செய்ய முயற்சி செய்துள்ளனர்.
Friday, 30 August 2013
முத்துப்பேட்டை: கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் பா.ஜா.க! -எஸ்.டி.பி.ஐ.கண்டனம்!
முத்துப்பேட்டை: இன்று 30/08/13 எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாரூர் மாவட்ட பொதுசெயலாலர் நெய்னா முகம்மது வெளியிட்ட அறிக்கையில் முத்துப்பேட்டையில் தொடர்ந்து விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் BJP கட்சியின் குண்டர்கள் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் புகுந்து கலவரம் ஏற்படுத்தி வருகின்றனர்.
Friday, 23 August 2013
நீதிபதிகள் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ! மத்திய மாநில அரசுகளுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை !!
இதுதொடர்பாக மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
“நம் நாட்டில் அனைத்து சமூக மக்களும் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அனைத்து துறைகளிலும் அவர்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை அவர்கள் பெற்றிட வேண்டும். இதுவே சமூக நீதியாகும். ஆனால் இந்நாட்டில் வாழுகிற பெரிய சமூகங்களில் ஒன்றான முஸ்லிம்கள் அனைத்து துறைளிலும் தொடர்ந்து பின்தங்கியே உள்ளனர்.
Wednesday, 31 July 2013
Tuesday, 30 July 2013
சர்வதேச குத்ஸ் தினம் - ஆகஸ்ட் 2
உலக வரைப்படத்தில் தீவிரவாதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு நாடு, தனக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லை கோடுகள் எதுவும் இல்லாத தேசம், தேவைப்படும்போது அப்பாவிகளின் நிலங்களை அபகரித்து தன்னுடன் இணைத்து கொள்ளும் நாடு, ஐக்கிய நாடுகளின் சபையின் தீர்மானங்களை பல முறை மீறிய நாடு, இப்படு தேவையற்ற பல சிறப்புகளை பெற்ற தேசம் தான் இஸ்ரேல். புனித பூமியான ஃபலஸ்தீன் மற்றும் முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் ஆகிய பிரதேசங்களில் இவர்கள் கொலை செய்வதற்கு தயங்காதவர்கள் இவ்று பச்சிளம் பாலகர்களையும் கொலை செய்ய தயக்கம் காட்டுவதில்லை.
Monday, 29 July 2013
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!
சேலம்: சமூகத்தை புணரமைக்கும் பணியில் பெண்களின் பங்கு இன்றியமையாதது . அதை நிறைவேற்றும் நோக்கில் தேசிய அளவில் உருவாக்கப்பட்டது தான் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட். மாதாந்திர ஒழுக்கப் பயிற்சி முகாம் , விழிப்புணர்வு பிரச்சாங்கள், கருத்தரங்குகள், குடும்ப நல ஆலோசனைகள் உட்பட பெண் சமூகத்தை முன்னேற்றும் விதமாக பல சமூகப் பணிகளை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் செய்து வருகின்றது.
காரைக்கால்: பா.ஜ.க வன்முறையால் பாதிக்கப்பட்டோரை பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் நேரில் சந்திப்பு!
காரைக்கால்: பா.ஜ.கவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 22.07.2013 அன்று தமிழகம் முழுவது பா.ஜ.க. பந்த் அறிவித்திருந்தது. இந்த பந்த் தோல்வியடைந்துள்ளது என்றாலும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் பா.ஜ.கவினர் வன்முறையில் ஈடுபட்டனர்.
Tuesday, 23 July 2013
செனையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!
சென்னை: வருடத்திற்கு ஒரு முறை சுழற்சியாக ரமலான் மாதம் நம்மை வந்தடைகிறது. அம்மாதத்தில் பயற்சி முகாம் அமைத்து, நாம் நோன்பு நோற்க நம்மோடு தங்கியிருந்து ஆன்மீக பயிற்சியளித்து, பாவங்கள் அகற்றி, பலஹீனமான ஈமானைப் பலப்படுத்தி, தொலைநோக்கு பார்வையுடன் சமூகத்தை வழிநடத்தி, போராட்ட குணத்துடன் வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது. இந்த புனித ரமலான் மாதத்தில் சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டும், சமூகத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பல்வேறு இடங்களில் ஜமாத்தார்களை ஒருங்கினைக்கும் விதமாக இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.
பந்த் என்னும் பெயரில் பா.ஜ.க வினர் வன்முறையாட்டம்! பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!
சென்னை: பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் (52) சேலத்தில் சில மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பாஜக சார்பாக இன்று (22.07.2013 ) தமிழகம் முழுவதும் முழு கடை அடைப்பிற்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது. பாஜக சார்பில் நடைபெற்ற இந்த பந்தில் தமிழகம் முழுவதும் பெரும்பான்யான பகுதிகளில் வன்முறை வெடித்தது. பாஜகவின் வன்முறை நடவடிக்கைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
Friday, 19 July 2013
எஸ்.டி.பி.ஐ கட்சியை கண்டு பயந்து நடுங்கும் பாஜக!
சமீபகாலமாக தமிழகத்தில் மீண்டும் காலூன்ற மதவாத கட்சியான பாரதீய ஜனதாகட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது.காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுக்கட்சி தாங்கள் தான் எனவும்,நரேந்திர மோடிக்கு தான் பிரதமர் ஆகும் தகுதி உள்ளது என கூறிக்கொண்டு கூட்டங்கள் போடுவதும்,இந்துத்வா தலைவர்களுக்கு ஏற்படும் சொந்தப்பிரச்சனைகளை மத ரீதியாக திசை திருப்புவதும் தொடர்கதையாகி போனது. இவர்கள் தொந்தரவு தாங்க முடியாமல் காவல்துறையும் அப்பாவி பொதுஜனங்கள் மீது வழக்கு போடுவதும் பிறகு நீதிமன்றம் விடுவிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Wednesday, 17 July 2013
ஸ்கூல் சலோ: 3.3 கோடி ரூபாய் பள்ளிக்கூட சாதனங்களை வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட்!
புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டுதோறும் நடத்தி வரும் ஸ்கூல் சலோ திட்டத்தில் இந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக 3 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்கூல் கிட்டுக்களை (பள்ளிக்கூட சாதனங்கள்) வழங்கியுள்ளது. மொத்தம் 1,16, 595 ஸ்கூல் கிட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாப்புலர் ஃப்ரண்ட் அளித்த புகாரில் ப்ரஸ் கவுன்சில் நடவடிக்கை! - ஐ.பி, என். ஐ.ஏவுக்கு நோட்டீஸ்!
புதுடெல்லி: நற்பெயரை கெடுக்கும் வகையில் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து 10 நாளிதழ்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அளித்த புகாரில் ஐ.பி மற்றும் என்.ஐ.ஏவுக்கு ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. நேற்று டெல்லியில் நடந்த அமர்வில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அளித்த புகாரில் வாதம் கேட்டபிறகு நோட்டீஸ் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)



















