புதுடெல்லி: எகிப்தில் முதன் முறையாக ஜனநாயக ரீதியில் தேந்தெடுக்கப்பட்ட எகிப்து ஜனாதிபதியை ஆயுத படையை (இராணுவத்தை) கொண்டு வெளியேற்றியது மிகவும் கவலைக்குரியது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் தெவித்துள்ளார்.
Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts
Friday, 5 July 2013
Thursday, 4 July 2013
எகிப்த்: அறுபது வருடப் பிரச்சினைகளை ஒரு வருடத்தில் எவ்வாறு தீர்க்க முடியும்?- யூசுஃப் அல் கர்ளாவி!
ஒன்பது சாகாப்தங்கள் அடங்கிக் கிடந்த எகிப்தியர்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்வான ஜனாதிபதி முர்ஸியுடன் ஒருவருடம் பொறுமையாக இருக்க முடியவில்லை..! ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமானஅரசையும் மக்களையும் மாத்திரமல்ல தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும் இலக்கு வைத்தே இராணுவம் சதிப் புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் பிடிக்காது.
எகிப்தில் அராஜகம்!-முஹம்மது முர்ஸியை ஆட்சியில் இருந்து நீக்கியது ராணுவம்!
கெய்ரோ: 30 வருடங்கள் நீண்ட ஹுஸ்னி முபாரக்கின் அராஜகமான சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கள் நடத்திய எழுச்சிப்போராட்டத்தின் இறுதியில் எகிப்தில் முதன் முறையாக நடந்த ஜனநாயகரீதியான தேர்தலில் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றிப் பெற்ற முஹம்மது முர்ஸியை அந்நாட்டின் ராணுவம் ஆட்சியில் இருந்து அகற்றியுள்ளது. அதிபர் முர்ஸியை ஆட்சியில் இருந்து வெளியேற்றியதாக ராணுவம் அறிவித்துள்ளது.
Monday, 17 June 2013
பாப்புலர் ஃபிரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் கலந்துகொண்ட மலேசியாவில் நடைபெற்ற "இஸ்லாத்திற்கு எதிரான சதியும்! முஸ்லிம்களின் நிலையும்! கருத்தரங்கம்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று (16/06/13) "இஸ்லாத்திற்கு எதிரான சதியும் முஸ்லிம்களின் நிலையும்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இஸ்லாமிய நற்பணி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் பாப்புலர் ஃபிரண்டின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஷாஜஹான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
Wednesday, 12 June 2013
Tuesday, 14 May 2013
கைபர்-பக்துன்கவா சட்ட சபையில் ஆட்சி அமைக்கும் இம்ரான்கான் தலிபான்களின் நெருக்கடியை சமாளிப்பாரா?
கைபர்-பக்துன்கவா சட்ட சபையில் ஆட்சி அமைக்கும் இம்ரான்கான் தலிபான்களின் நெருக்கடியை சமாளிப்பாரா? என அரசியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி 35 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து கட்சி தொடங்கிய 17 ஆண்டுகளில் இம்ரான்கான் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார்.
Thursday, 1 December 2011
இஸ்ரேலை தாக்க ஏவுகணைகள் தயார் – ஈரான் .
டெஹ்ரான்:இஸ்லாமிய குடியரசான ஈரானை தாக்க முற்பட்டால் இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சரும் பிரிகேடியருமான ஜெனரல் அஹ்மத் வாஹிதி தெரிவித்துள்ளார்.
வாஹிதி கடந்த ஞாயிறு அன்று ஈரானுக்கு எதிராக போர் தொடுத்தால் இஸ்ரேல் பிழைக்க குறைந்த வாய்ப்பே இருக்கும் என்றும் ஈரான் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலின் மீது ஏவும் என்றும் கூறியுள்ளதாக பார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Wednesday, 2 November 2011
ஆட்சியில் பங்கேற்கவே நாம் தயாராகிறோம்
தமிழில் - ஏ.டபிள்யூ.எம்.பாஸிர்
ஷெய்க் றாஷித் அல் கன்னூஷி; தூனீஸிய இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர், இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் சர்வதேச உயர் சபையின் உறுப்பினர், சர்வதேச
முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் பிரதித் தலைவர். அவருடன் தூனீசியாவின்
அஷ்-ஷுரூக் பத்திரிகை மேற்கொண்ட நேர்காணலின் சில பகுதிகளை மீள்பார்வை
வாசகர்களுக்காகத் தருகிறோம்.
கோயில் இடம் யாருக்கு?:வழக்கில் ஹிந்துக்களுக்கு சொந்தமானது என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு Yesterday at 7:05 pm
இஸ்லாமாபாத்:வடமேற்கு பாகிஸ்தானில் கோர் பாத்ரி என்ற இடத்தில் பழமையான ஹிந்துக்கோயில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறந்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 160 வருட பழமையான கோரக்நாத் கோயில்தான்
பெஷாவர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்டது.
பாகிஸ்தானில் வசிக்கும் ஹிந்துக்களின் முக்கிய கோயில்தான் கோரக்நாத். கோயில் பூஜாரியின் மகள் தொடர்ந்த வழக்கில் பெஷாவர் உயர்நீதிமன்றம் ஹிந்துக்களுக்கு சொந்தமானது என தீர்ப்பளித்தது. உரிமை தகராறு தொடர்பாக நீண்டகாலமாக கோயில் போலீஸ் பாதுகாப்பில் இருந்தது.
பெஷாவர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்டது.
பாகிஸ்தானில் வசிக்கும் ஹிந்துக்களின் முக்கிய கோயில்தான் கோரக்நாத். கோயில் பூஜாரியின் மகள் தொடர்ந்த வழக்கில் பெஷாவர் உயர்நீதிமன்றம் ஹிந்துக்களுக்கு சொந்தமானது என தீர்ப்பளித்தது. உரிமை தகராறு தொடர்பாக நீண்டகாலமாக கோயில் போலீஸ் பாதுகாப்பில் இருந்தது.
Tuesday, 1 November 2011
Subscribe to:
Posts (Atom)







