Thursday, 28 July 2011
கர்நாடகா சுரங்க ஊழல் : ரெட்டி சகோதரர்களும் ராஜினாமா?
கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பாவைத் தொடர்ந்து ரெட்டி சகோதரர்களும் அமைச்சரவையில் இருந்து விலகலாம் என தகவல் வெளியாகி உள்ளன.
கர்நாடகவில் சுரங்க ஊழல் தொடர்பான லோக் ஆயுக்த விசரணை அறிக்கையில் முதலமைச்சர் எடியூரப்பாவின் பெயர் இடம்பெற்றதை தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
பாலஸ்தீன் : தடுத்து நிறுத்திய அதிகாரிகள் கொதித்தெழுந்த சமூக ஆர்வலர்கள்
அமெரிக்காவை ஆட்டிப் படைக்கின்றன யூத
சக்திகள் என்பது அமெரிக்க அரசியலை உற்று நோக்குபவர்களுக்குப் புரியும்.
ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திலும் யூத சக்திகள் வலுவாகவே செல்வாக்கு செலுத்தி
வருகின்றன என்பது பலருக்குத் தெரியாது.
இதற்கு சமீபத்திய உதாரணம் தான்
பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அடாவடித்தனத்தைக் கண்டிக்க இஸ்ரேலுக்குச்
செல்லவிருந்த சமூக ஆர்வலர்கள் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் விமான
நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டது. ஐரோப்பாவில் இவ்விவகாரம் பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிலும் முதல்வரின் கவனம் திரும்பட்டும்
தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் 69
சதவிகித இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த 69
சதவிகித இட ஒதுக்கீட்டை துவக்கத்திலே எதிர்க்கத் துவங்கினர் இட
ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள்.
உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீட்டை
எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் கடந்த 16-11-1992ல்
வழங்கிய தீர்ப்பில், ஒரு மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50
சதவிகிதத்தை விஞ்சக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.
முஸ்லிம்களை ஏமாற்றும் மத்திய அரசு ஒரு அலசல்!
சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மத்திய அரசு பல நலத் திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கின்றது. அவை பத்திரிகைகளில் முக்கியச் செய்திகளாக இடம் பெறும். அதன்பின் அத்திட்டங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு உரிய பயன்கள் கிடைக்குமா என்றால் அந்தத் திட்டங்கள் என்னவென்றே முஸ்லிம் சமுதாயத்திற்குத் தெரியாது.
அரசு அதிகாரிகளை அணுகி குறிப்பிட்ட திட்டம் குறித்து கேட்டால் - இன்னும் மத்திய அரசிடமிருந்து முறையான உத்தரவு வரவில்லை என்று அதிகாரிகள் பதில் சொல்வார்கள். சிறுபான்மை மக்களுக்கான திட்டங்கள் வெறும் ஏட்டளவில்தான் உள்ளது.
நில மோசடிப் புகார் : விரைவில் கைதாகிறார் கே.என்.நேரு
திருச்சி காவல்துறையினர் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த ஒய்.சாலமன் தேவராஜ் என்பவர், கே.என்.நேரு, திருச்சி மாநகராட்சி துணை மேயர், தி.மு.க நகரச் செயலாளரான அன்பழகன் ஆகியோர் மீதும் காவல்துறையில் இன்று புகார் அளித்தார்.
Subscribe to:
Posts (Atom)