நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன.
Home
- முகப்பு
- செய்திகள்
- உலகம்
- இயக்க செய்திகள்
- கட்டுரை
- முத்துப்பேட்டை
- கல்வி
- மருத்துவம்
- இஸ்லாம்
- வரலாறு
- சட்டம்
- பயனுறு தகவல்
- பெண்கள் பகுதி
- கவிதை
- தேடல்
Showing posts with label முத்துப்பேட்டை. Show all posts
Showing posts with label முத்துப்பேட்டை. Show all posts
Friday, 24 January 2014
Saturday, 5 October 2013
சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தெருமுனை பிரச்சாரம்!
"அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்" என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடத்திவருகிறது. தொடர் பிரச்சாரத்தின் நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெற இருக்கிறது.
Saturday, 28 September 2013
கூத்தாநல்லூர் நகர பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் நகர அலுவலகம் திறப்பு விழா!
முஸ்லிம் சமூகத்தை வலிமைபடுத்துவதற்காக தேசிய அளவில் செயல்பட்டு கொண்டிருக்கும் மக்கள் பேரியக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் புதிய நகர அலுவலகம் கூத்தாநல்லூர்-ல் 27-09-2013 இன்று சிறப்பாக திறக்கப்பட்டது.
Thursday, 19 September 2013
முத்துப்பேட்டையில் நாளை அனைத்து ஜும்மா பள்ளிவாசலிலும் முஸாஃபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி வசூல் செய்யப்படுகிறது!
கண்ணியத்திற்குரிய ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உத்திரப்பிரதேசம் மாநிலம் முஸாஃபர் நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கி நடைபெற்ற கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 70,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Tuesday, 17 September 2013
8 மாவட்ட காவல்துறையின் உச்சக்கட்ட பாதுகாப்பில் முத்துப்பேட்டை! -இது தேவையா?
முத்துப்பேட்டையில் இன்று விநாயகர் ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, திருவாரூர், நாகை, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், புதுகோட்டை, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களின் காவல்துறையின் உச்சக்கட்ட பாதுகாப்பில் இருக்கின்றது மற்றும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனமும் இன்று முத்துப்பேட்டையை நோக்கி இருக்கின்றது.
Monday, 9 September 2013
Friday, 6 September 2013
முத்துப்பேட்டை: தொடரும் காவல்துறையின் முஸ்லிம் விரோதபோக்கு! அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து கைது செய்ய முயற்சி முறியடிப்பு!
சமீப காலமாக வீண் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துவது முத்துப்பேட்டை காவல் துறையின் நோக்கமாகவுள்ளது. அந்தவகையில் நேற்று இரவு எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில், முன்னாள் எஸ்.ஐ. பால்ராஜ் உட்பட காவல் துறையினர் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அ. அபூபக்கர் சித்திக் அவர்களின் வீட்டில் அத்துமீறி நுழைந்து கைது செய்ய முயற்சி செய்துள்ளனர்.
Sunday, 1 September 2013
முத்துப்பேட்டையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று நாடகமாடும் காவல்துறை! -அப்பாவி முஸ்லிம்கள் மீது வழக்கு பதிவு!
முத்துப்பேட்டையில் நடக்கவுள்ள சர்ச்சைக்குரிய ஊர்வலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமலிருக்க இருதரப்பிலிருந்தும் 10 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
Friday, 30 August 2013
முத்துப்பேட்டையில் அரசர் குளம் மேம்பாட்டிற்கு 29 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!
முத்துப்பேட்டை உள்ள அரசர் குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்பது 9வது வார்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
அதனடிப்படையில் வார்டு கவுன்சிலர் பாவாபகுருதீன் அவர்களின் கடும் முயற்சியால் குளம் தூர் வார மற்றும் அதை சுற்றி நடைபயிற்சி பாதை அமைக்க ரூ.29 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முத்துப்பேட்டை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வளர்ச்சியை கண்டு அலறும் பா.ஜா.க.!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. வருடாவருடம் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தை தூண்டி அதன் மூலம் மக்களின் இயல்பு வாழ்கையை பாதிக்க செய்வதுதான் வழக்கம். ஆனால் இந்த வருடம் ஊர்வலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பரபரப்பு ஆரம்பமாகிவிட்டது.
முத்துப்பேட்டை: கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் பா.ஜா.க! -எஸ்.டி.பி.ஐ.கண்டனம்!
முத்துப்பேட்டை: இன்று 30/08/13 எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாரூர் மாவட்ட பொதுசெயலாலர் நெய்னா முகம்மது வெளியிட்ட அறிக்கையில் முத்துப்பேட்டையில் தொடர்ந்து விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் BJP கட்சியின் குண்டர்கள் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் புகுந்து கலவரம் ஏற்படுத்தி வருகின்றனர்.
Friday, 12 July 2013
முத்துப்பேட்டை: மக்களுக்கு பயனில்லாத பேரூராட்சியின் திட்டம்! தடுத்து நிறுத்திய எஸ்.டி.பி.ஐ
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள பட்டறை குளம் நீண்ட நாட்களாக அசுத்தமான நிலையில் இருந்துவருகிறது. குளத்தை சுத்தம் செய்து தூறுவாரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
Friday, 5 July 2013
முத்துப்பேட்டையில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வலியுறுத்தியும், பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலரை (E.O) பணி அமர்த்த கோரியும், குப்பைகளை அகற்றாமல் தொடரும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும், சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யாததை கண்டித்தும், SDPI கட்சி சார்பாக நேற்று (04/07/13) காலை 10.30 மணி அளவில் பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Friday, 21 June 2013
தூக்கு தண்டனையை நிரந்தரமாக ரத்து செய்! இந்திய அரசே வலியுறுத்து! முத்துப்பேட்டையில் நாளை கடையடைப்பு மற்றும் ஆர்பாட்டம்!
கும்பகோணம், முத்துப்பேட்டையை சேர்ந்த 2 வாலிபர்களின் தூக்கு தண்டனையை குவைத் அரசு நிரந்தரமாக ரத்து செய்யக்கோரி முத்துப்பேட்டையில் நாளை கடையடைப்பு போராட் டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tuesday, 18 June 2013
முத்துப்பேட்டையில் UAPA சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ தெருமுனை பிரச்சாரம்!
யுஏபிஏ சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)சார்பில் இன்று (18.06.2013) முத்துப்பேட்டையில் நான்கு இடத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. யுஏபிஏ (UAPA) என்று அழைக்கப்படுகிற கருப்புச்சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தினை இந்தியா முழுவதும் மேற்கொண்டு வருகிறது.
Saturday, 29 October 2011
Monday, 24 October 2011
முத்துப்பேட்டை பேரூராட்சி தேர்தலில் பணம் பலம்தான் வெற்றிபெற்றது! SDPI வேட்பாளர் பேட்டி !
முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க கட்சி பணம் பலத்தைக் கொண்டு வெற்றிபெற்றுள்ளது என்று SDPI - யின் மாநில செயலாளரும், வேட்பாலருமாகிய சித்திக் மச்சன் என்கிற திரு. அபூபக்கர் சித்திக் அவர்கள் இதனைத் தெருவித்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், முத்துப்பேட்டையில் நடைபெற்ற பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எனக்கு 1927 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு உயர்த்தி தந்த அனைத்து முத்துப்பேட்டை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெருவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெருவித்தார்.
Tuesday, 4 October 2011
Subscribe to:
Posts (Atom)










.jpg)







