Friday, 22 July 2011
அரசு பஸ்களில் டிக்கெட் வழங்க நவீன மின்னணு கருவிக்கு ரூ.10 கோடி அனுமதி: ஜெயலலிதா
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்
நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், வழக்கமான
முறையில் அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டுகள் வழங்கும் முறைக்கு மாற்றாக,
நேரடித் தொடர்புள்ள (ஆன்லைன்) கையடக்க மின்னணு கருவி மூலம் பயணச்சீட்டு
வழங்கினால் பயணம் செய்பவருக்கு எளிதில் பயணச்சீட்டு வழங்கிட இயலும். அதே
போன்று நடத்துனரின் பணியும் எளிதாகும்.

மூன்றாண்டு பி.எல்.: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில்
நடத்தப்படும் மூன்று ஆண்டு சட்டப் (பி.எல்.) படிப்புக்கான கலந்தாய்வுக்கு
விண்ணப்பிக்க ஜூலை 20 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
மூன்றாண்டு பி.எல். படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 25 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
லோக் ஆயுக்தவும் லோக்பாலும்!
குழாயடிச் சண்டை என்று ஒன்றுண்டு. ஒரு குடம் தண்ணீரை யார் பிடிப்பது என்கிற சண்டையில் இரு வீட்டு ரகசிய விவகாரங்கள் நாற்சந்திக்கு வரும். அந்த மாதிரியான குழாயடிச் சண்டையைத்தான் இப்போது மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாகவே சூடாகக் கிளப்பியுள்ளன பாஜகவும் காங்கிரசும்.
பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது!

உள்ளாட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு தான் உள்ளது. இந்நிலையில் பெண்களுக்கான ஒதுக்கீட்டை 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
புளியங்குடியில் பள்ளிக்கு தீ வைப்பு 2 லட்சம் பொருட்கள் சேதம்
புளியங்குடி:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி நகராட்சியில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றிற்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர்.இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
Subscribe to:
Posts (Atom)