Showing posts with label முகப்பு. Show all posts
Showing posts with label முகப்பு. Show all posts

Friday, 24 January 2014

முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. 

Thursday, 14 November 2013

பாபரி மஸ்ஜித் வரலாறு! -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு!

இளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி

பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக இன்றைய தலை முறைக்கும் வளரும் இளம் தலைமுறைக்கும் இந்த ஆவணத்தை கொண்டு செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

Wednesday, 16 October 2013

“அச்சமற்ற அரசியல்” உருவாக களம் அமைப்போம் ! பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் அவர்களின் தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து தனது அருமை மகனையே அறுத்துப் பலியிடத் துணிந்த இப்ராஹீம் நபி அவர்களின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக உலக முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். இந்த தியாக உணர்வும் இறை அச்சமும் நம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும்

Saturday, 5 October 2013

சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தெருமுனை பிரச்சாரம்!

"அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்" என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடத்திவருகிறது. தொடர் பிரச்சாரத்தின் நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெற இருக்கிறது.

Saturday, 28 September 2013

கூத்தாநல்லூர் நகர பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் நகர அலுவலகம் திறப்பு விழா!

முஸ்லிம் சமூகத்தை வலிமைபடுத்துவதற்காக தேசிய அளவில் செயல்பட்டு கொண்டிருக்கும் மக்கள் பேரியக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் புதிய நகர அலுவலகம் கூத்தாநல்லூர்-ல் 27-09-2013 இன்று சிறப்பாக திறக்கப்பட்டது. 

Thursday, 19 September 2013

முத்துப்பேட்டையில் நாளை அனைத்து ஜும்மா பள்ளிவாசலிலும் முஸாஃபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி வசூல் செய்யப்படுகிறது!


கண்ணியத்திற்குரிய ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு, 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உத்திரப்பிரதேசம் மாநிலம் முஸாஃபர் நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கி நடைபெற்ற கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 70,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tuesday, 17 September 2013

8 மாவட்ட காவல்துறையின் உச்சக்கட்ட பாதுகாப்பில் முத்துப்பேட்டை! -இது தேவையா?

முத்துப்பேட்டையில் இன்று விநாயகர் ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, திருவாரூர், நாகை, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், புதுகோட்டை, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களின் காவல்துறையின் உச்சக்கட்ட பாதுகாப்பில் இருக்கின்றது மற்றும்  ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனமும் இன்று முத்துப்பேட்டையை நோக்கி இருக்கின்றது.

"புனையப்பட்ட வழக்குகள், புதைக்கப்ட்ட வாழ்வுகள்" : கோவையில் நடந்த புத்தக வெளியீடு

கோவை : "அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்" என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை நடத்த இருக்கும் தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கோவையில் நடந்த துவக்க பொதுக்கூட்டத்தில் "புனையப்ட்ட வழக்குகள், புதைக்கப்ட்ட வாழ்வுகள்" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? கோவையில் எழுச்சியுடன் நடைபெற்ற துவக்க பொதுக்கூட்டம்!

கோவை :  "அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்" என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக  தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6  வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் நடைபெறுகிறது. தொடர் பிரச்சாரத்தின் துவக்க தினமான  செப்டம்பர் 15 அன்று கோவையில் மாபெரும் துவக்க பொதுக்கூட்டமும், நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெறும்.

Friday, 6 September 2013

முத்துப்பேட்டை: தொடரும் காவல்துறையின் முஸ்லிம் விரோதபோக்கு! அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து கைது செய்ய முயற்சி முறியடிப்பு!

சமீப காலமாக வீண் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துவது முத்துப்பேட்டை காவல் துறையின் நோக்கமாகவுள்ளது. அந்தவகையில் நேற்று இரவு எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன்  தலைமையில், முன்னாள் எஸ்.ஐ. பால்ராஜ் உட்பட காவல் துறையினர்  பாப்புலர் ஃப்ரன்ட்  ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அ. அபூபக்கர் சித்திக் அவர்களின் வீட்டில் அத்துமீறி நுழைந்து கைது செய்ய முயற்சி செய்துள்ளனர்.

அபூபக்கர் சித்திக் அவர்களின் வீட்டில் அத்துமீறி நுழைந்து கைது செய்ய முயற்சி!

Sunday, 1 September 2013

முத்துப்பேட்டையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று நாடகமாடும் காவல்துறை! -அப்பாவி முஸ்லிம்கள் மீது வழக்கு பதிவு!


முத்துப்பேட்டையில் நடக்கவுள்ள சர்ச்சைக்குரிய ஊர்வலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமலிருக்க இருதரப்பிலிருந்தும் 10 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Saturday, 31 August 2013

பா.ஜா. கட்சியில் பெயர் தெரியாதவனுக்கே பிரபலமடைய இதுதான் வழி என்றால்?

திண்டுக்கல்லில் பா.ஜனதா கட்சியின் கிளை தலைவர் பிரவீன்குமார் வீட்டில் சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நாடகம் என போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

Friday, 30 August 2013

முத்துப்பேட்டையில் அரசர் குளம் மேம்பாட்டிற்கு 29 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!

முத்துப்பேட்டை உள்ள அரசர் குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்பது 9வது வார்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. 
அதனடிப்படையில் வார்டு கவுன்சிலர் பாவாபகுருதீன் அவர்களின் கடும் முயற்சியால் குளம் தூர் வார மற்றும் அதை சுற்றி நடைபயிற்சி பாதை அமைக்க ரூ.29 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முத்துப்பேட்டை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வளர்ச்சியை கண்டு அலறும் பா.ஜா.க.!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. வருடாவருடம் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தை தூண்டி அதன் மூலம் மக்களின் இயல்பு வாழ்கையை பாதிக்க செய்வதுதான் வழக்கம். ஆனால் இந்த வருடம் ஊர்வலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பரபரப்பு ஆரம்பமாகிவிட்டது.

முத்துப்பேட்டை: கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் பா.ஜா.க! -எஸ்.டி.பி.ஐ.கண்டனம்!

முத்துப்பேட்டை: இன்று 30/08/13 எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாரூர் மாவட்ட பொதுசெயலாலர் நெய்னா முகம்மது வெளியிட்ட அறிக்கையில் முத்துப்பேட்டையில் தொடர்ந்து  விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் BJP கட்சியின் குண்டர்கள்  முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் புகுந்து கலவரம் ஏற்படுத்தி வருகின்றனர்.

Friday, 23 August 2013

நீதிபதிகள் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ! மத்திய மாநில அரசுகளுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை !!

இதுதொடர்பாக மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
“நம் நாட்டில் அனைத்து சமூக மக்களும் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அனைத்து துறைகளிலும் அவர்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை அவர்கள் பெற்றிட வேண்டும். இதுவே சமூக நீதியாகும். ஆனால் இந்நாட்டில் வாழுகிற பெரிய சமூகங்களில் ஒன்றான முஸ்லிம்கள் அனைத்து துறைளிலும் தொடர்ந்து பின்தங்கியே உள்ளனர். 

Wednesday, 31 July 2013

போலி என்கவுண்டருக்கு சி.பி.ஐ விசாரணை தொடங்க வேண்டும்! : பாப்புலர் ஃப்ரண்ட்!

டில்லி: போலி போலி என்கவுண்டருக்கு வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியிறுத்தியுள்ளது. இதுதொடர்பாக டில்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் இல்யாஸ் தும்பே அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,

Tuesday, 30 July 2013

சர்வதேச குத்ஸ் தினம் - ஆகஸ்ட் 2


உலக வரைப்படத்தில் தீவிரவாதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு நாடு, தனக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லை கோடுகள் எதுவும் இல்லாத தேசம், தேவைப்படும்போது அப்பாவிகளின் நிலங்களை அபகரித்து தன்னுடன் இணைத்து கொள்ளும் நாடு, ஐக்கிய நாடுகளின் சபையின் தீர்மானங்களை பல முறை மீறிய நாடு, இப்படு தேவையற்ற பல சிறப்புகளை பெற்ற தேசம் தான் இஸ்ரேல். புனித பூமியான ஃபலஸ்தீன் மற்றும் முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் ஆகிய பிரதேசங்களில் இவர்கள் கொலை செய்வதற்கு தயங்காதவர்கள் இவ்று பச்சிளம் பாலகர்களையும் கொலை செய்ய தயக்கம் காட்டுவதில்லை.